ஒரு செடியின்கடிதம்
எனக்கு கிடைத்தது
சுகமானதொரு வாழ்வு.
நான் கொடுக்கும் மலர்கள்
நாள்தோறும் சில இறைவனுக்கு
நாள்தோறும் சில நாயகிக்கு
நாள்தோறும் சில நோன்பிற்கு
பறிக்கையில் வலிக்கும் ஆனால்
பிடித்திருக்கிறது
செல்லும் இடம் சிறப்பானதாயிற்றே
அனைத்தும் பறித்து விட்டால்
அழுகை வருமென
சிலதை இங்கேயே விடுகிறார்
சுகமாய் உள்ளதெனக்கு
சில சமயம் மழையில் நனைகிறேன்
சில சமயம் வெயிலில் காய்கிறேன்
சில சமயம் குளிரின் நடுக்கம்
ஆனால்
மலர்விக்கிறேன் பூக்களை
மகிழ்விக்கிறேன் மனங்களை
அதுபோதும் எனக்கு
பறித்துச் சென்றால் புகழ் உனக்கு
இல்லையேல்
ஏக்கம் தவிர் மலரே
என்னுடந்தான் நீ இருக்கிறாய் என்றும்
இப்படிக்கு
மலர் கொடுக்கும் செடி
![]()




Users Today : 47
Users Yesterday : 88
Total Users : 58623
Views Today : 1067