அந்த ஒரு நாள்
பல்லு விழும்போது,
இந்த பல்லைத் தானே தினமும்
காலை, மாலை விழுந்து விழுந்து
தேய்ச்சோம்னு நினைப்போம் !
அந்த ஒரு நாள்
நரைத்த தலை முடி
கொட்டும் போது,
இந்த முடியைத் தானே
ஷாம்புவை கொட்டி கொட்டி
வளர்த்தோம்னு
நினைப்போம் !
அந்த ஒரு நாள்
கை சருமங்களை
தடவும்போது
சுருங்கும்,
அப்போது
இந்த சருமத்தை தானே
சரக் சரக்னு
எண்ணெய் போட்டு
தடவினோம்னு
நினைப்போம் !
அந்த ஒரு நாள்
கண்களின் பார்வை
மங்கும்போது,
இந்த கண்ணைத்தானே
கண்ணுக்கு கண்ணாக
பார்த்து பார்த்து
கவனித்தோம்னு
நினைப்போம் !
அந்த ஒரு நாள்
பேசும்போது
வாய் குழறினால்,
இந்த வாயால்தானே
இல்லாததும் பொல்லாததும்
பேசினோம்னு
நினைப்போம் !
அந்த ஒரு நாள்
நினைப்பை
இன்றே
நினைத்தால்
அந்த ஒரு நாள்
இன்னினைப்புகள்
வராமல் தவிர்க்கலாம் !
இறைவன் பாதம்
மறக்காமல்
இருக்கலாம் !
யோசனை : வேதாந்தக் கவியோகி நாகசுந்தரம்
![]()




Users Today : 105
Users Yesterday : 188
Total Users : 46332
Views Today : 128