வரிகள் : அருணாசல கவிராயர்
இசை பாடலாக்கம் கவியோகி
ராச ராசர்க்கும் ராசன் –
தசரத ராசன் இருந்தானே
தேசதிலகன் அயோத்தி நகர்க்கொரு
திலகன் ரவிகுல திலகன் ஆகவே
மந்திர தந்திரமும் நித்திய நைமித்தமும்
மகங்களும் தினம் செழிக்கவே
வன்புலி யோடு பசுவும் ஓர்துறை நீர்
உண்டு கொண்டு பயம் ஒழிக்கவே
இந்திர பதமும் குபேர தனங்களும்
எவரும் சிறிதென்று பழிக்கவே
எங்கெங்கும்முப் போகம் விளையவே
திங்கள்தோறும் மும்மாரி கொழிக்கவே
நாலு வர்ணா சிரமங்களும் சொன்ன
நடை புரண்டு பாயாமலே
நரர்க்கும் வேறுள உயிர்க்கும் வயதுகள்
நடுவிலே தேயாமலே
கோலமாகிய மிருகமும் பறவையும்
குறிகடந்து மேயாமலே
குடியில் ஆறிலொரு கடமை கொண்டுசெங்
கோலின்முகம் சாயாமலே
மறுமங்கை யருக்கும் மறுமன்ன வருக்கும்
மார்பும் முதுகும் கொடாமலே
வளரும் அண்ட லட்சுமியும்தன் அர
மனையைவிட்டடி எடாமலே
அறுபதாயிரம் வருஷமும்
ஏகாதிபத்தியம் விடாமலே
ஆரும் மனதில் விசாரத்தால்
ஆராய்ச்சி மணியைத் தொடாமலே
![]()




Users Today : 39
Users Yesterday : 95
Total Users : 59931
Views Today : 91