வரிகள் அருணாசல கவிராயர்
இசை பாடலாக்கம் கவியோகி
விநாயக சரணம் விநாயக சரணம்
ஜெயஜெய விநாயக சரணம்
ஜெயஜெய விநாயக சரணம்
அநாத ரட்சகனே கெஜமுகனே
ஐங்கரனே சிவ சங்கரன்மகனே
அன்பிலாத பேயேன் என்னுடைய அறிவு விளங்கவே துணைவருவாயே
என்குலதெய்வம் நீயே இந்த ராமநாடகத்துக் கனுக்கிரகிப்யாயே
வானவர்பணிவோனே நல்ல வாக்குத்தந்து காத்தருள் சிமாலே நானுவதடியேனே
ராம நாடகத்துக் கருள்புரி நீதாளே
உண்மை ஞானம் தோணும்
உன்றன் உதவியாலே நல்ல புத்திகள் பூணும்
நன்மை எய்திடும் ராம நாடகத்தைச் சொல்ல
முன்னிற்க வேணும்
![]()