இது ஒரு நிலாக்காலம் !

சந்த்ரயானை இன்று

உன்னிடம் அனுப்பி விட்டோம்,
நிலவே உன் முகம் காட்டு!

விக்ரம் என்று பெயர் வைத்ததால் என்னவோ
தோல்விக்கு பிறகு வெற்றி பெற்று விட்டது !

விக்ரம் லாண்டருக்குப் பிறகு ஆதித்யா,
இப்பொழுது சொல்லுங்கள்
விக்கிரமாதித்யா என்று வரும் !

இந்திய விஞ்ஞானிகள்
இதயத்தில் மெல்லியவர்கள்,
அதனால்தான்
அவர்களுக்கு சாஃப்ட் லாண்டிங்
பிடித்திருக்கிறது!

அன்று
வெண்ணிலவே வெண்ணிலவே
விளையாட ஜோடி தேவை என்று
காதலுக்கு பாட்டு எழுதினார்கள்,
விளையாட்டுக்கு எழுதினார்களோ
என்னவோ

ஆனால் இன்று

உண்மையில்
வெண்ணிலவே வெண்ணிலவே
விளையாட உனக்கு
ஒரு ஜோடியை
இந்திய விஞ்ஞானிகள்
அனுப்பி விட்டார்கள்!

இனி
சந்த்ரயான் மூலம்
நிலவே உன்
சரித்திரம்
தெரிந்து விடும்!

எந்த பிரச்சினை வந்தாலும்
விடிந்தால் சரியாகி விடும்
என்கிறார்கள்,
நிலவே உன் மேல்
அவ்வளவு நம்பிக்கை!
எங்கள் நம்பிக்கையை
நீ வீணடிக்கவில்லை !

எல்லார்க்கும் நன்றாம் பணிதல்
என்பார்கள்,
பணிந்து இறங்கிய
எங்கள் பணியாள்
உன்மேல் ஏறி ஓட
இனிதான்
ஆரம்பிக்கப் போகிறது!

இந்தியா
மெய்ஞானத்தில்
மட்டுமல்ல
விஞஞானத்திலும்
வல்லரசு என்பது
இன்று
உண்மையானது!

இனி வரும் காலங்கள்
நிலாக் காலங்களாக
ஆக
இஸ்ரோவிற்கு
இனிய
வாழ்த்துகள் !

இஸ்ரோவே
நாங்களும் இனி
உங்களுடன் சேர்ந்து
நிலாச் சோறு
சாப்பிடுகிறோம்!

_கவியோகி நாகசுந்தரம்_

Loading

admin

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments