வாலையவள் சித்தர் பாட்டு
வேதத்தின் கடைசியப்பா போதம் போதம்
நாதத்தின் மூலமப்பா அந்த பாதம் பாதம்
வாலையவள் கடத்துவிப்பாள் காலம் காலம்
ஓலைவரும் ஓர்னாளில் வீண் வாதம் வாதம்
பிறந்து தினம் இறந்துவிடும் கோலம் கோலம்
சிறந்து வாழ வேண்டுமடா சீலம் சீலம்
திறந்துவிடும் மெய்ஞானப் பாலம் பாலம்
இறங்கவில்லை நெஞ்சின்கீழ் ஆலம் ஆலம்
நவராத்திரி நாயகியின் நாமம் நாமம்
தவறாமல் ஜபித்துவிடு சேமம் சேமம்
பவரோகம் அகன்றுவிடும் பாவம் பாவம்
சிவனாரின் சக்தியவள் தெய்வம் தெய்வம்
சரத்காலச் சந்திரனின் தண்மை தண்மை
கரத்தினிலே இருத்திவிடும் இம்மை மறுமை
புரத்தினிலே புரக்குமந்த வித்யை வித்யை
சிரத்தினிலே பாதம்வைக்க விலகும் மாய்கை
வஸந்த காலம் வந்ததப்பா வீசும் தென்றல்
உசந்த நிலை அவளருள்வாள் மின்னல் மின்னல்
கசந்து விடும் வாழ்க்கைக்கு அவள் கன்னல் கன்னல்
இசைந்துருக உயர்ந்துவிடும் எண்ணல் எண்ணல்
ஒன்பது நாள் விரதமிரு வரும் மேன்மை மேன்மை
அன்பதுவே இறுதிவரை வரும் உண்மை உண்மை
தின்பதுவே தினம்மீதம் வாழ்வு பொய்மை பொய்மை
மென்பொருளாம் மனமதனின் செய்கை செய்கை
சப்தசதி பாடமதை தினம் ஓது ஓது
குப்தவதி பாஷ்யமதை கேளு கேளு
தப்தாயப் பிண்டமிது வெறும் சூது சூது
அப்புரத்தில் அவளிருப்பாள் காணு காணு
நாளையென கடத்திடாதே நாளை நாளை
வேளைவந்தால் கூற்றுவனுக் கிரையே இரையே
வாளாய் இருக்காதே இதுவே நல் ஹோரை ஹோரை
தாளை பணிவதற்கு வந்த்தது வேளை வேளை
திரிபுரைக்கு இரு சக்தி உண்டு சியாமளை வாராஹி
பரிபுரையின் மந்திரத்தை தினம் புடமாய்ப் போடு
எரித்துவிட்ட காமனுக்கு தந்தாள் உயிரை
சரித்துவிட்ட சலீலத்தால் செய்வாய் பூசை பூசை
எழுனூறால் கழலினிலே சொல்லு ஸ்வாஹா ஸ்வாஹா
பழுத்துவிடும் பரமபதம் நல்ல வாகாய் வாகாய்
உளுத்துவிடும் உடலுக்குள்ளே ஓங்காரந்தான்
அழுத்தமாக
இருக்குதப்பா ஆஹா ஆஹா
(வேதாந்த கவியோகி நாகசுந்தரம்)
![]()



Users Today : 37
Users Yesterday : 78
Total Users : 55644
Views Today : 245