ஒரு ரத்தினத்தின் பணிப்பயணம்!

பாசத்திற்கும் மரியாதிற்கும் உரிய ரத்னா மேடம் அவர்களுக்கு, ஒரு சகோதரனாக உங்கள்

பணிநிறைவு நாளில் சமர்ப்பிக்கும் கவிதை மடல்:

ரத்னா எனும் பெயருக்கேற்ற நற்பண்பே – எம் நித்தமும் பணியில் நின்ற நற்சுடரே

சகோதரி எனும் ஒரு சொல்லில் உலகம் அடக்கம்

NCRB கோப்புகளின் நடுவே நாம் வளர்ந்தோம் புள்ளிவிவரத் தரவுகளில் புது உறவு கண்டோம்

சட்டத்தின் நுணுக்கங்களைச் சரியாகச் சொன்னீர்கள் திட்டமிட்டுப் பணிகளைத்திறம்படச் செய்தீர்கள்.

சுந்தரம் என என்னை நீங்கள் அழைத்த அந்த அழகு நம்பிப் பணியைச் செய்திட அதுவே ஒரு மெருகு.

உயரதிகாரி என்றாலும் ஒரு தாயின் கனிவு

உயரிய உங்கள் எண்ணமே எங்கள் துணிவு

கம்ப்யூட்டர் திரைகளில் கண்கள் சிவந்த

நேரங்கள் கனிவான பேச்சால் மறைந்தன மன ஓரங்கள்

டெட்லைன்கள் துரத்தும்போது உங்கள் அமைதி திட்டமிடல் ஒன்றே உங்கள் வெற்றியின் நீதி

மேஜையில் தேநீர்… மனதில் உங்கள் பாசம் மேஜிக் செய்வதுபோல முடிப்பீர்கள் விவாதம் காணீர்…

அலுவலகக் கூட்டங்களில் உங்கள் குரல் கணீர்

அரிய பல ஆலோசனைகள் என்றும் பன்னீர்

குற்றப் பதிவேடுகளின் ஒவ்வோர் ஏடும் பேசும் வெற்றிக் கொடி நாட்டிய உங்கள்

உழைப்பைப் பேசும்

குடும்ப நண்பராய் எங்களுடன் நீங்கள் இணைந்தது குன்றாத பெருமையாய் என் இல்லம் தழுவியது சிறு சிறு கிண்டல்கள்… சில நேரக் கோபங்கள் அத்தனையும் பொறுத்துக் கொண்ட பெரிய மனம்

ரத்தினம் தேயாது… அதன் மதிப்பு குறையாது ரத்னா மேடம் உங்கள் இடம் யாராலும் நிரப்ப முடியாது

இன்று விடைபெறுகிறீர்கள் ஒரு புன்னகையோடு

இன்று முதல்

உங்கள் காலம் செல்லட்டும் மகிழ்வோடு

உங்கள் வாழ்வின் உதயம் காலையில் ஒன்பது மணி அவசரம் இனி இல்லை

கவலைகள் ஏதுமற்ற உங்கள் காலம் எல்லை இல்லை

சாதனைகள் ஆயிரம் நீங்கள் செய்திருப்பதுண்டு சோதனைகள் கடந்தே சரித்திரம் படைப்பதுண்டு

ஒரு சகோதரனாய் நான் வேண்டுவது இதுதான்

உங்கள் உடல்நலம் என்றும் சிறப்பாக இருக்கத்தான்

ஆண்டு பல கடந்தாலும் நம் உறவு வாடாது ஈண்டு

நாம் கொண்ட பாசம் என்றும் அழியாது NCRB-யில் உங்கள் முத்திரை என்றென்றும்

நிலைக்கும் என் நெஞ்சில் உங்கள் வழிகாட்டுதல் தித்திக்கும்

மாண்புமிக்க மேடம்… என் பாசமிகு சகோதரி !

மீண்டும் ஒருமுறை சொல்கிறேன்…

ஓய்வுக்காலம் என்பது உழைப்பிற்குக் கிடைத்த பரிசு

ஒளிரட்டும் உங்கள் வாழ்வு…

அதுவே எமது ஆவல்

வாழ்க பல்லாண்டு! வளர்க உங்கள் உழைப்பு!

 

வாழ்த்துக்களுடன்

அன்புச் சகோதரன்

நாகசுந்தரம்

 

Loading

admin

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments