குறவன் குறத்தி பாடல்
குறவன் : நிக்காத என் மனச நிலை நிறுத்த வேண்டுமோ குறத்தி ?
குறத்தி : நிக்காத மனசு தன்ன நிறுத்தினா நன்மைதான் குறவா !
குறவன் : நில நிறுத்த சொல்லும் வேதம் நூறு விதமாக கூறுதே குறத்தி ?
குறத்தி : எதேனும் ஒரு வழிய நன்னா பிடிச்சுக்கோ குறவா !
குறவன் : என்ன வழி எனக்கு சுலபம்முன்னு சொல்லுவாய் குறத்தி யோகம் கர்மம் எதுவும் எனக்கு காதுல ஏறல குறத்தி
குறத்தி : ராம ராம சங்கரான்னு சொன்னா போதுமே குறவா வேற யோகம் கர்மம் எதுவும் உனக்கு வேணுமோ குறவா
குறவன் : இரண்டு தடவ சொல்லும்போது உலகம் என்ன இழுக்குதே குறத்தி
குறத்தி : இழுத்தாலும் இழுக்கட்டும் இன்னொரு தரம் சொல்லலாமே குறவா !
குறவன் : நாளைக்கு சொல்லுறேன் இன்று சோம்பலா இருக்குதே குறத்தி
குறத்தி : இப்போதோ சொல்லி விடு நாளை இருப்போமா என்று தெரியாதே குறவா
குறவன் : இறந்த பின்னால் எங்கு செல்வோம் உனக்கு தெரியுமோ குறத்தி
குறத்தி : பாவ புண்ணிய பலனுக்கு தகுந்த பிறவி கிடைக்குமாம் குறவா
குறவன் : பிறவியே வேண்டாமுண்ணு எனக்கு தோணுதே குறத்தி
குறத்தி : நல்லதுதான் நினைப்பு அது லேசுலே வராது குறவா
குறவன் : வேதம் சாத்திரம் ஏதும் நான் படிக்கலயே குறத்தி
குறத்தி : நான் மறைகள் முடிவு அது நான்கற போதம் தானே குறவா
குறவன் : எனக்குள்ளே இருந்தாலும் அது எனக்கு தெரியலயே குறத்தி
குறத்தி : எனக்கு தெரியல ன்னு சொல்லரயே அந்த எனக்கு யார்னு பாரேன் குறவா
குறவன் : எனக்குள்ளே பார்த்து விட்டால் பின்னே நமக்குள் பேச்சு ஏது குறத்தி
குறத்தி : பேச்சற்ற மோன நிலை அதுவே முக்தி என்பார் குறவா
![]()




Users Today : 105
Users Yesterday : 188
Total Users : 46332
Views Today : 131
ஜயசக்தி.
பேச்சற்ற போன் நிலை பெற எளிமையாக விளக்கியுள்ளீர்கள்.
நன்றி கவியோகியாரே