தன் முனைக் கவிதைகள்-1

திண்ணையில் கவிஞன்,
பொங்குகிறது கவிதை !
அடுப்படியில் பானை,
பொங்குகிறது அரிசியில்லாமல் !

மரணப் படுக்கையில்
மன்றாடும் நோயாளி !
உறவுகள் எட்டத்தில்
அழுகிறது குழந்தை !

அறுவடை நாள்
மூட்டைகள் நிறைகிறது !
விவசாயி கையில்
நூறு ரூபாய் !

காலில்லா சிறுவன்
வித்தை காட்டுகிறான் !
ஆச்சர்யக் குறிகளாய் மக்கள்
கேள்விக்குறியாக அவன் வாழ்வு !

பத்தாயிரம் ரூபாய் படுக்கை
உறக்கம் வரவில்லை !
கிழிந்த பாயில் உழவன்
விழிப்பு வரவில்லை !

Loading

admin

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments