பஞ்சு மூட்ட…

எட்ட இருந்து பார்த்தாக்க

எல்லாம் அழகுதான்

கிட்ட போயி நின்னாக்க

வெறும் கானல் நீருதான் !

எட்ட இருந்தா

எல்லாமே தேவ அமுதந்தான்  !

முட்ட முட்ட குடிச்சிடவே

மனதில் என்னந்தான் ஒரு

சிப்பு சிப்பி விட்டாலோ

எட்டிக் காயிதான் !

கருப்பான முடியின்னு

மினுமினுப்புதான்

உருப்படியா ஒண்ணுமில்ல

மருவுதாணிதான் !

அழகுன்னு

கருவம் கொண்டு

அலைச்சல் வீணுதான் !

பழகிடவே கிட்ட போனா

சகிக்க வேணுந்தான் !

வெளி அழக பார்க்காதே

வெளுத்து போகுந்தான்

உள்ள உள்ள அழகுதான் மனச

உருக வைக்குந்தான் !

உதட்டுக்கு சிவப்பு பூச

எதற்கு சாயந்தான்

கள்ளமில்லா புன் சிரிப்பு

என்றும் சிவப்புதான் !

பணக்கார சொத்து எல்லாம்

பகல் வேடந்தான் !

அழகு பணம் அதிகாரம்

கர்வம் எதுக்குதான் !

அமலாக்க துறை வந்தா

அம்புட்டும் வெளுச்சந்தான் !

குடும்பத்துக்கு வேண்டியது

கொஞ்சம் காசுதான் !

அடுக்கடுக்காக எதற்கு பணம்

படுத்தா செலவுதான் !

கொஞ்சம் போறுமுன்னு

நினைச்சு விட்டா

அஞ்ச வேணாந்தான் !

பஞ்சு மூட்ட அதுக்குள்ள

தண்ணி விட்டாக்கா

இஞ்சு கூட இழுக்க படும்

பெறும் சிரமம்தான் !

தூர நின்னு பார்த்தாக்க

பச்ச புல்லுதான் !

கரைய கடந்து வந்துபுட்டா

காஞ்ச நெல்லுதான் !

போதுமப்பா போதுமப்பா

கூழும் கஞ்சியும் !

வாதம் பித்தம் வாராது

வேதம் இதுவேதான் !

 

Loading

admin

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments