எந்தன் மனதில் மட்டும் ஏன் இந்தபாசம்?
ஓர் முதியவரின் மன நிலையில் இருந்து இந்த பாடலை எழுதியுள்ளேன். பாசத்தை வளர்க்கவும் முடியாமல் விடவும் முடியாமல் அவர் தவிக்கும் நிலை பாடலாக வந்துள்ளது.
கனிமரத்தில் வாழும் பறவை குஞ்சு கூட
தனியி றக்கை முளைத்து விட்டால் அதை
தனித்தனியாய் பிரிந்து விடும் தாய்க் குருவி
எந்தன் மனதில் மட்டும் ஏன் இந்த பாசம்?
புத்தனவன் போய் நின்றான் போதிமரத்தில்
சித்தர் பலர் துறந்து விட்டார் சம்சாரத்தை
எந்தன் மனதில் மட்டும் ஏன் இந்த பாசம்?
உத்தமராம் சங்கரரும் ஊரைத் துறந்தார்
சித்த எந்தன் சிறு மனமே சிந்தனை செய்வாய்
எந்தன் மனதில் மட்டும் ஏன் இந்த பாசம்?
அன்னை தந்தை தெய்வமென தொழுது நிற்பேன்
கண்ணே எந்தன் மணியே என்று கொஞ்சுகின்றார்
எந்தன் மனதில் மட்டும் ஏன் இந்த பாசம்?
பின்னே வரும் நாய்கூட தன் வாலை ஆட்டும்
என்மகனோ எந்தன் சொல்லை கேட்பதரிதாம்
எந்தன் மனதில் மட்டும் ஏன் இந்த பாசம்?
வைராக்கியம் வருவதற்கே இந்த வாழ்க்கையாமே
தராதரம் பார்க்கின்றார் தனிதனியாய் பேச
எந்தன் மனதில் மட்டும் ஏன் இந்த பாசம்?
தாரமவள் வந்தவுடன் தன் தாயை மறப்பார்
பாரமாக நினைக்கின்றான் பேரன்கூட
எந்தன் மனதில் மட்டும் ஏன் இந்த பாசம்?
பாசத்தை துறந்து பரம்பொருளைப் பேசு
வாசம்வீசும் மலரின் வாழ்வு ஓரிரு நாளே
எந்தன் மனதில் மட்டும் ஏன் இந்த பாசம்?
![]()



Users Today : 45
Users Yesterday : 88
Total Users : 58621
Views Today : 1039