காத்திருப்பு
சங்கரரே என் குரு சந்தேகமில்லை.
நதியில் துணி துவைத்தேன்.
காத்திருக்கிறேன்
தோடகராய் மாறுவது
எப்போது?
கங்கையின் அக்கரையில்
குருநாதர்
இக்கரையில் நான்
காத்திருக்கிறேன்
பத்மபாதராய் மாறுவது
எப்போது?
வீட்டு வாசலில் குருநாதர்
ஊமையாய் உள்ளே நான்
காத்திருக்கிறேன்
ஹஸ்தாமலகராய் மாறுவது
எப்போது?
உபதேச உண்மைகள்
ஓரளவு புரிகின்றன
காத்திருக்கிறேன்
உண்மைச் சீடனாய்
மாறுவது எப்போது?
![]()




Users Today : 41
Users Yesterday : 88
Total Users : 58617
Views Today : 319