இரண்டில்லா இயல்பைந்து

இரண்டில்லா இயல்பைந்து
(அத்வைத பஞ்சரத்னம்)
உடல் இலை புலன் இலை மனமதுவுன் நானில்லையே
திடம் தரும் பிராணனில்லை புத்தியில்லையே
மனைவி மக்கள் நானிலை மண்ணுமில்லையே
நினைவினை கடந்தவொரு நிலையான சிவனும் நான் (1)
பாம்பு பாம்பு பாம்பு என்று பயந்து நான் அலறினேன்
தாம்பு கயிறு தானென்று குருவும் வந்து கூறினார்
பாம்பு என்று பயந்தபோது தாம்பில் பாம்பு எவ்விடம்
தாம்பு என்று தெரிந்தபின்னர் பயம் போனதெவ்விடம் (2)
உலகம் என்பதுண்மையோ உள்ளிருக்கும் உண்மைகேள்
கலகம் செய்யும் மாய்கையால் காட்சிபோல தோன்றுமே
உலகம் உன்னில் மறைந்தபின் ஊமையாகிப் போனதே
திலகமாக தோன்றும் அந்த பரசிவம் நானலோ (3)
பிறப்புமில்லை வளர்வுமில்லை இறப்பதும் இல்லையே
பறக்கும் இந்த உடலதே பிறந்திறக்கும் பொய்மையே
திறக்கும் வாசல் நின்றபின் தன்னை அறிவதுண்மையே
சிறக்கும் அந்த சிவனும் நான் செப்புவது உண்மையே (4)
கண்ணில்படும் காட்சியெல்லாம் கண்ணாடி பிம்பமே
மண்ணில் பிறந்துவளர்வதெலாம்மாய்கையின் செய்கையே
இன்னுமேன் ஐயமே இன்பதுன்பம் எதுவரை
சொன்னதுண்மை சொன்னதுண்மை சிவனதுசொரூபமே(5)

Loading

admin

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments