என்ன பெரும் தவம் யான் செய்ததறியேனே
ஸஹானா – ராகம்
என்னையுன் அருளினால் ஆட்கொண்டவிதம் சொல்வேன் (என்ன)
முன்னமோர் பிறவியில் முழுதுமாய் எனைத்தூக்கி
சொன்ன சொல்தனை இப்பிறவியிலே செய்ய (என்ன)
நடமாடும் தெய்வமுடன் நாளுறவு கொண்டவர்
நானிங்கு உய்திட நல்லுபதேசம் செய்தவர்
தடையில்லா தவபூஜை தான்செய்தும்
விடையேறிவந்த தத்துவனை (என்ன)
ஜயசக்தியென ஜயகோஷம் செய்தெனை
பவவினை அதனை வெகுதூரம் விரட்டினார்
காமனுக்கு பயந்து காதமிருந்தவனை
காமேசனாக்கி கருணைசெய்த அத்திருவை (என்ன)
![]()




Users Today : 33
Users Yesterday : 31
Total Users : 52244
Views Today : 67