ஆன்ம நீதி தசகம்
(உண்மை வாக்கியம் பத்து – ஆன்ம போதம் பதிவுகளை படித்து வந்ததன் பயனாக வெளிவந்த பாடல்)
வேத வேத சாகைகள் வேண்டியது இருக்குதே
பாதை மாறிப் போவதேன் பரமது இருக்குதே
சேத்திலே விழுவதேன் சற்று உந்தன் உள்ளுறை
கூத்திலே ஆடும்சிவன் கருத்தினுள் வருவனே (1)
போதும் இந்த வாழ்க்கையில் போய்விழ வேண்டுமோ
காதில் விழும் சொல்லது கரியமால் மந்திரம்
போதில் பூக்கள் பறித்துமே பாதத்தில் போடுமே
வாதில் வீணாய் விழுந்துமே வருத்தப் படல்வேணுமோ (2)
கூடநிற்கும் கோஷ்டிகள் காமக் க்ரோத மல்லவோ
தேடநிற்கும் ஆன்ம போதம் தூயதான பொருளலோ
வாடநிற்கும் மனந்தனில் வாய்க்கும் வேத மல்லவோ
பாடநிற்கும் பாட்டெலாம் பரம்பொருளின் பெருமையே(3)
ஆன்மபோதம் என்பது அருளின் போதம் அல்லவோ
தனக்குள்ளே தன்னைக் காணும் தனிபெரும் வித்தையாம்
கணக்கிடாத கர்மங்கள் காததூரம் ஓடுமே
மணந்திடாத சந்தநம் மேதினியில் உள்ளதோ (4)
உள்ளே உள்ளே திரும்பினால் உண்மை காணலாகுமே
தள்ளி நின்று கொள்ளி போட்டகன்றிடும் மாந்தர்காள்
பள்ளியில் படித்தறியும் பாடமிதை சொல்லுமோ
வெள்ளியில் கிளிஞ்சல்போல வியவஹரிக்க லாகுமோ (5)
தனக்கு நிகர் யாரென்று தற்பெருமை பேசுவீர்
உனக்குள் ஈசன் உள்ளதை உணர்ந்து காண்பதறிகிலீர்
கனக்கும் மாயை கண்ணுக்குள் காட்சி வேறதானதே
உனக்குள் எனக்குள் உள்ளபொருள் ஒருபொருள் ஆனதே (6)
தினம்தினம் மலரெடுத்து தீர்த்தமாடும் தொண்டரே
மனத்திலே அழுக்கு நிற்க மெத்தபூஜை யாகுமோ
கணப்பொழுது கண்ணன் தன்னை கருத்திலே வைப்பீரேல்
மணந்திடும் சந்தநம் முழுதும் பூஜை ஆகுமே (7)
உண்ண உண்ண தெவிட்டிடாத உள்ளேநீர் இருக்கையில்
கன்னல்நீர் குடிக்கவேண்டி கரும்பதை ஒடிப்பதேன்
தன்னைத்தான் தெரிந்திடவே தரணியிலே தேடுறீர்
கண்ணைமுடி ஒருகணம் கருத்துள்ளே வையுமே (8)
கருகிப் போகும் காசிலே காலம் போக்கும் மாந்தரே
உருகி உருகி உத்தமனை உந்தனுள்ளே காணுமின்
சுருங்கி வாடும் மனமது சுந்தரமாய் ஆகுமே
கருங்கல் உள்ளே தேரையை கொண்டு வைத்ததாரதோ (9)
ஊமையார் உண்மை கண்டும் உபயோகம் ஆகுமோ
நாமைநாம் அறிந்துணர நூட்கள் பயனாகுமோ
தூமையான ஆண்டவன் தேகத்துள் இருக்கிறான்
சாமதான பேதம்போல் சாதனம்னான் கிருக்குதே (10)
![]()




Users Today : 33
Users Yesterday : 31
Total Users : 52244
Views Today : 57