இச்சையில்லை இச்சையில்லை
அச்சமில்லை அச்சமில்லை மெட்டு
இச்சையில்லை இச்சையில்லை
இச்சையென்பதில்லையே
விச்சை தன்னை வாழ்வில் கொண்டு வீரனாக இருக்கையில்
இச்சையில்லை….
காணும் கண்ணில் காட்சி வந்து
காமம் கொள்ள வைப்பினும் இச்சையில்லை….
மிச்சம் மீதி பிரார்ப்தம் மேனி தன்னில்
மூண்டு வந்த போதிலும் இச்சையில்லை….
வேதம் நாலு அங்கம் ஆறு
காதில் விழுந்து நிற்பதால் இச்சையில்லை….
குருவும் வந்து குணமும்தந்து
இருளகற்றி விட்டதால் இச்சையில்லை….
அன்னையவள் பூஜிக்க அருகினிலே
இருப்பதால் மோக்ஷத்தில் கூட இச்சையில்லை….
கச்சை கட்டும் பஜனையிலே
மூச்சை கட்டிப் பாடுவதால் இச்சையில்லை….
வாயில் ராம நாமம் வசித்து
வந்து உற்றதனால்
பொய் ஜகத்து மேலெனெக்கு இச்சையில்லை….
சம்சார சர்ப்பமது சமீபத்தில்
இருந்தாலும் அத்வைத
அறிவென்னும் மகுடியது
இருப்பதனால் இச்சையில்லை….
காமக்ரோத பதார்த்தங்கள்
கைதனிலே இருந்தாலும்
மெய்பசி இருப்பதனால் இச்சையில்லை….
இனிபிறப்பு இல்லாத காரணத்தால்
சனி தோஷம் குரு உச்சம்
ஜாதத்தில் இருந்தாலும் இச்சையில்லை….
![]()



Users Today : 9
Users Yesterday : 47
Total Users : 52127
Views Today : 13