கிளிக்கண்ணி மெட்டில்
சீடக் கண்ணி
எத்திக்கும் இனிக்கும் இன்பம்
முத்திக்கு மூலம் வித்யை
கத்துக்க வேணுமடா சீடா ஞானம்
சித்திக்க வேணுமடா ஞானம்
சித்திக்க வேணுமடா
நினைவுதான் முதலாவரணம்
கனவுதான் இரண்டு என்பார்
சிந்திக்க வேணுமடா சீடா சினத்தை
நிந்திக்க வேணுமடா சினத்தை
நிந்திக்க வேணுமடா
நித்தியம் ஜபிக்க வேணும்
பத்தியை கைகொள்ள வேணும்
உத்தியே இதுதானடா சீடா அதற்கே
பத்ததி உள்ளதடா அதற்கே
பத்ததி உள்ளதடா
கண்ணால் காணும் உலகம்
எண்ணாமல் எதுவும் இல்லை
உள்ளுக்குள் உள்ளதடா சீடா உண்மை
உனக்குள்ளே உள்ளதடா உண்மை
உனக்குள்ளே உள்ளதடா
பிரக்கியானம் பிரம்மம் என்று
இருக்குவேதம் கூறும் உண்மை
விருப்புடன் அறிவாயடா சீடா என்றும்
இருப்பது நீதானடா என்றும்
இருப்பது நீதானடா
அஹம் பிரம்மம் என்று கூறும்
யாஜுஷம் என்னும் வேதம்
என்றும் நீ இருப்பாயடா சீடா துவைதம்
என்றுமே இல்லையடா துவைதம்
என்றுமே இல்லையடா
தத்துவம் அஸியைக் கூறும்
சாமத்தின் சேதி இதுவே
காமத்தை வெல்வாயடா சீடா குருவால்
சேமத்தில் சேர்வாயடா குருவால்
சேமத்தில் சேர்வாயடா
அயமென்னும் ஆத்மா நீயே
அதர்வணச் சேதியடா
அர்த்தத்தை அறிவாயடா சீடா வீணாய்
அர்த்தத்தை சேராதடா வீணாய்
அர்த்தத்தை சேராதடா
நாலுவாக்கியம் நினைவில் கொள்ளு
நூலு பல நூறு உண்டு
மேலுக்கு மேயாதேடா சீடா (நீயும்) குருவின்
காலுக்கு கீழேயடா குருவின்
காலுக்கு கீழேயடா
![]()





Users Today : 29
Users Yesterday : 88
Total Users : 58605
Views Today : 288