அமர நிலை எய்த வேண்டாமோ?
ராகம் : புன்னாக வராளி
அமர நிலை எய்த வேண்டாமோ மனமே
பல்லவி
அந்த்ய ஜன்மா இதுவல்லவோ (அ)
அனுபல்லவி
குமரன் குருபரன் குஹானந்தன்
சந்ததம் அவன் தாள் பணிந்து நீ (அ)
சரணங்கள்
பிராரப்த கர்மாவால் வந்து பிறந்தாயே
தராதரம் பார்த்து தத்துவம் அறிவாயோ
சராசரி மனிதன் போல் சாக பிறந்தாயோ
முருகன் முதல்வன் முக்கண்ணன் புதல்வனைப்பணிந்து (அ)
வெற்று மனிதரை வீணாக புகழ்வாயோ
சற்று திருப்புகழ் சன்னதியில் பாடுவாயோ
பற்றை துறக்க வைத்து பரகதி தாந்தருவானே
கூற்றை கொல்லும் சக்தி ஆயுதன் அறிவாயோ (அ)
மனைவி மக்களெல்லாம் மரித்தால் உடன் வருவாரோ
தனையே தினம் தினம் எண்ணி தோத்திரம் செய்வாயோ
சுனையில் பிறந்தவன் சொந்தம் என்றும் அவனல்லவோ
வினையில் வீழாமல் வாயால் அவன் புகழை பாடுவாயோ (அ)
திரிவேணி சங்கமத்தில் திரிகோணத் திறைவியை
புரிபட வைத்தானே புண்ணியம் செய்தோமே
பரிபுரை அவளின் பத்ததி தந்தானே
சிரசிலே அவன் தாள் சந்ததம் வைத்து (அ)
அன்பிற்கு ஓர் சபை அமைய வைத்தானே
அன்பினால் அரவணைத்து ஆறுதல் தந்தானே
அன்பே அவனுரு ஆறுதலை கொண்டானே
இன்பக் கலப்பை நமக்கு இனிமையாய்த் தந்தானே (அ)
![]()



Users Today : 9
Users Yesterday : 47
Total Users : 52127
Views Today : 84