ஸ்ரீகுருவின் மஹிமை
மாற்றிவிட்டாரே குருநாதர் என்னை
மாற்றிவிட்டாரே (மா)
தோற்றமான தரணியிதில் தவித்து வந்தேனே
தோற்றமென புரியவைத்தார் திருவருளாலே (மா)
காமக்ரோத (உப்புக்) கடலினிலே குளிக்க சென்றேனே
நாமத்தினால் (நல்ல) நதியினிலே நனைய வைத்தாரே (மா)
ஆட்டம் போட்டு அவனியிலே அமுங்கி நின்றேனே
இட்டமுடன் தீட்சை செய்து எழுந்து நிற்க வைத்தாரே (மா)
ஆவணியின் மூலத்திலே அருகில் வந்தாரே
மேவிவரும் மங்களமாய் மனதைச் செய்தாரே (மா)
கண்ணைக்கட்டி காட்டில் விட்ட கதியில் இருந்தேனே
கண்ணைக்கட்டி உள்ளே என்னை பார்க்க வைத்தாரே (மா)
கோபம் கொண்டு எந்தன் காமம் தீயில் இட்டாரே
தாபம் கொண்ட எந்தனுக்கு தயையை செய்தாரே (மா)
காமேசர் அருகிருக்க காமக்ரோதம் வளருமோ
தாமாக வந்து என்னை தழுவிக் கொண்டாரே (மா)
வேதமில்லை வாதமில்லை வீணாய் இருந்தேனே
காதில்காதி வித்யை சொல்லி கடக்க வைத்தாரே (மா)
பிறவியில்லை என்று என்னை பாட வைத்தாரே
உறவு கொண்டு உதவி செய்து உயர வைத்தாரே (மா)
ஹஸ்தம் தன்னில் பிறந்து அபயஹஸ்தம் தந்தாரே
புஸ்தகங்கள் படித்து அறிவை வளரு என்றாரே (மா)
பிள்ளை குட்டியோடு வாழ்தல் தொல்லை இல்லையாம்
உள்ளத்திலே உறுதி கொள்ளல் துறவு என்பாரே (மா)
ஆவரண பூஜை செய்தால் அதிகம் மகிழ்வாரே
தேவதேவன் எந்தன் குரு பெருமை அறிவீரே (மா)
![]()




Users Today : 33
Users Yesterday : 31
Total Users : 52244
Views Today : 43