அருட்சக்தியின் ஆத்மபோத அறைகூவல்
ஆமப்பா நானிங்கே முக்தன் கேளு
ஓமப்பா நானோதும் வேதம் கூறு
நாமப்பா நமக்குள்ளே நாதன் தாளு
காமமப்பா காமந்தான் கெடுதிக் காறு
எந்தனுக்குள்ளேதான் இறைவன் இறைவன்
அந்தமிலா அரும்புகழைக் கொண்டான் அவனே
பந்தமிலா மோட்சமது அகத்தின் உள்ளே
சொந்தமாக வந்துரைத்தான் நாதன் நாதன்
நினைவில்லை நாட்டமில்லை மனந்தான் மனந்தான்
அனைத்திற்கும் அதுவேதான் பந்தம் பந்தம்
கணப்பொழுதும் கடவுள்தாள் மறவாய் மறவாய்
மணம்வீசும் மனத்தினுள்ளே என்றும் என்றும்
ஆன்மாவே அனைத்திற்கும் மூலம் மூலம்
அந்தசேதி சொன்னாரே அருட் சக்தி சக்தி
இந்த இப்பிறவியிலே குருவாய் வந்தார்
மந்தமான மானிடருக்கதுவே வேதம் வேதம்
ஆன்மபோதம் அன்று தந்தார் ஆதிகுருவும்
பின்னாளில் தந்தாரே மோனத்திறைவன்
இன்னாளில் நாமுய்ய தந்தார் குருவும்
தனக்குள்ளே திரும்பப்பா தெய்வம் தெய்வம்
மனைவி மக்கள் பெருஞ்செல்வம் போகும் போகும்
தனக்குள்ளே தானறியும் தகைமை வேணும் வேணும்
மனக்குள பிள்ளையார்தான் மனதுக்குள்ளே
தினக்குளியல் ஆன்மாதான் தீர்த்தம் தீர்த்தம்
கோயிலுக்குள் கொலுவிருக்கும் மூர்த்தம் மூர்த்தம்
சாயாத கோபுரத்தின் கலசம் உச்சம் உச்சம்
மாயாத மாயம் செய்தார் இல்லை மிச்சம் மிச்சம்
தாயாக எதிர்நிற்க மாளும் அச்சம் அச்சம்
ஜபித்திடுவாய் என்றும் ஜய சக்தி சக்தி
லபித்திடுமே லலிதையிடம் பத்தி பத்தி
குவித்திடுவாய் உன்னுள்ளம் உத்தி உத்தி
தவித்திடாமல் கரம்சேரும் முத்தி முத்தி
![]()




Users Today : 58
Users Yesterday : 88
Total Users : 58634
Views Today : 1086