கவி மாலை.
மஹான் ஸ்ரீகாரைசித்தர் நூற்றாண்டில்
தோன்றிய ஒர் கவி மாலை.
காரைக்கோட்டையவன் ஊராம் ஊராம்
வேர்கள் பலதொங்கும் வெளியில் நிற்பான் (சாந்தவெளி)
நார்கள் மணம்பெறவே சூழ்ந்தகூட்டம்
பாரினிலே சித்தரையோ புரிதல் கட்டம்
கட்டம் மாற்றியவன் கடவுள் என்பான்
இட்டசித்தி கொண்டவனே இறைவனாவான்
தொட்டதெலாம் தூய்மைமிகு தங்கம் ஆகும்
நாட்டமெலாம் சித்தனுக்கு நாயகி தாளில் என்றும்
நாகரசன் பேட்டையிலே நாட்டிய கோட்டை
தாகம் மிகுந்தோர்க்கு நல்ராசப் பாட்டை
பாகம் தந்தவர்க்கு படைத்தான் பாட்டை
சோகம் போய்விடவே அடையும் பரத்தின் வீட்டை
சித்தனப்பா அவன் சொற்கள் கேளு வேதம் வேதம்
பித்தனப்பா அவன் செய்கை புரிதல் தூரம் தூரம்
வித்தைகள் செய்வதிலே அவர்க்கு பிரியம் பிரியம்
முத்திக்கு முயன்றதனால் மாய்கை சரியும் சரியும்
கனக வைப்பு தந்தான் அது தங்கம் தங்கம்
மனமதனை மயக்குகின்ற மாயம் மாயம்
நினைவினிலே தங்கினிற்கும் சாயம் சாயம்
சனகாதி முனியெல்லாம் அவன் சொந்தம் சொந்தம்
துணியாத பேர்களுக்கோ மனம் தேயும் தேயும்
துணிந்து விட்டால் தூலமிது காயும் காயும்
அணிந்திடுவான் இருனூலை வெண்மை வெண்மை
தணிந்திடுமே தாகமது பரம் அண்மை அண்மை
புறசெய்கை கண்டு மயங்காதே வேடம் வேடம்
அறமகத்தில் கொண்டிடுவான் பாடம் பாடம்
முறத்தினிலே மடப்பள்ளி சாதம் சாதம்
கரத்தினிலே முத்திதரும் கூடம் கூடம்
கிரிவலத்தை வந்தாலோ ஞானம் ஞானம்
அரிதான அன்புவெள்ளம் அவனுள்ளம் உள்ளம்
கிரியான குள்ளமுனி வந்தார் வந்தார்
புரிபடவே பிடியுங்களென சொன்னார் சொன்னார்
மண்ணிதிலே வாழ்க்கையிது பொய்மை பொய்மை
நுண்ணிய அறிவதுவே என்றும் உண்மை உண்மை
பண்ணிய பாக்களெலாம் அவன் தன்மை தன்மை
கண்ணிமைக்கும் பொழுதினிலே மாறும் கண்மை கண்மை
சித்தனவன் சொற்கேளு செவிச்செல்வம் செல்வம்
மத்ததெலாம் அவன் மாற்றும் செல்வம் செல்வம்
உத்தமியின் தாளைத்தான் அவன் கொள்வான் கொள்வான்
சித்தியெலாம் சூழ்ந்து நிற்கும் சில சோம்பர்க்காமே
விந்தையிலே விந்தையப்பா சித்தன் செய்கை
புந்தியிலே புரிபடாத பித்தன் வாழ்க்கை
சந்தியிலே ஆற்றுகின்ற ஆதவன் தொழுகை
அந்தியிலே வந்துதவும் அருளின் பொய்கை
விட்டிட்டடா வேதனெறிக்கொவ்வா கருமம்
நாட்டிடடா நாகரசக் கோட்டை கோட்டை
காட்டிடடா கனகவைப்பு பாட்டை பாட்டை
ஓட்டிடடா உந்தன் குணக்கூட்டை கூட்டை
சித்தனவன் வயதிங்கே இன்று நூறாம் நூறு
சித்தனவன் சாவதில்லை என்றும்பதி நாறாம் நாறு
உத்தமியின் பெயராயிரமாம் கூறுகூறு
எத்தனைதான் பிறப்பதுவோ இதுவே ஆறு ஆறு
![]()






Users Today : 132
Users Yesterday : 88
Total Users : 58708
Views Today : 1166