இனி ஒரு பிறவி
ராகம் : பைரவி
பல்லவி
இனி ஒரு பிறவி எனக்குண்டு இனிமேல்
இதை அறிவாய் மனமே (இனி)
அனுபல்லவி
பஞ்சேந்திரியக்கூடு பரமனிருக்கும் வீடு
அஞ்சாமலே தேடு அவனிருப்பான் பாரு
நெஞ்சத்திலே நின்று நாறிய வைத்தான் கேளு (இனி)
சரணம்
வித்தையில் நாட்டமெல்லாம் விவேகமாய் ஆச்சுது
சுத்த சத்துவமாய் மனம் சுகம் பெற லாச்சுதுது
சத்தான குருபாதம் சந்ததம் ஆச்சுது
பத்திமார்க்கத்தில் மனம் பத்திரமாய் இருக்குது் (இனி)
குருனாதன் பாதசேவை காலமெலாம் செய்யவும்
அருள்பெற்று ஆனந்தம் அக்கரையாய் ஆகவும்
பொருள் ஈட்டி பக்குவமாய் அவருக்கு படைக்கவும்
திருவடி பணிந்து தினம் தினம் துதிக்கவும்
(இனி)
எண்ணங்கள் அவர்பாதம் எழும்பி வருவதற்கு
கண்ணெல்லாம் காக்ஷியில் கருணையால் உருகுதற்கு
உண்ண உண்ண தெவிட்டாத ஞானானந்தமாவதற்கு
பண்ணமைத்து பைரவியில் பரமனை பாடுதற்கு (இனி)
![]()






Users Today : 133
Users Yesterday : 88
Total Users : 58709
Views Today : 1169