மெட்டு : செண்பகமே, செண்பகமே
கற்பகமே கற்பகமே
தென்மயிலைக் கற்பகமே
தேடி வரும் பக்தருமே
பார்த்திருப்பார் பொற்பதமே
கற்பகமே கற்பகமே
தென்மயிலைக் கற்பகமே
உன் பாதம் பாடும் வேத பாடம் நானும் படிச்சேனே
மண்மேலே ஆசைப்பட்டு பாத்து காத்து நின்னேனே
உன் பாதம் பாடும் வேத பாடம் நானும் படிச்சேனே
உன்முகம் பார்த்து நிம்மதி ஆச்சு
என் மனம் தானா பாடிடலாச்சு
என்னோட பாச பந்தம் மாறும் உன்ன கண்டாலே
எப்போதும் காலத் தொட்டு பாடப் போறேன் தன்னாலே
கற்பகமே கற்பகமே
தென்மயிலைக் கற்பகமே
தேடி வரும் பக்தருமே
பார்த்திருப்பார் பொற்பதமே
கற்பகமே கற்பகமே
தென்மயிலைக் கற்பகமே
மூணாம் பிறையை தலல காணும் நெத்திப் பொட்டோட
சிவனும் கலந்திருக்க வேணும் இந்த பாட்டோட
நானும் கலந்திருக்க வேணும் இந்தப் பாட்டோட
வெறுத்தது தேகம் தலை விதி தானோ
இழுத்தது என்ன உன்விழி தானோ
முல்லைப் பூ பூசை செஞ்சி பாவப் பாதை வாராது
உன் பாட்டுக்காரன் பாட்டு உன்னை விட்டுப் போகாது
கற்பகமே கற்பகமே
தென்மயிலைக் கற்பகமே
தேடி வரும் பக்தருமே
பார்த்திருப்பார் பொற்பதமே
கற்பகமே கற்பகமே
தென்மயிலைக் கற்பகமே
![]()




Users Today : 13
Users Yesterday : 44
Total Users : 51875
Views Today : 120