மண நாளில் ஓர் மனக்கவிதை!

மண நாளில் ஓர் மனக்கவிதை!
இல்லறத்தின் நல்லறம்
இனிமையாக கடந்தது
சொல்லறத்தின் மேன்மை பொங்க
சாளரமாய் தெரிந்தது
வில்லறத்தின் இராமனாய்
விளங்க மனம் எண்ணுது!
மைதிலியின் கரம் பிடித்து
மங்களமாய் நிறைந்தது
சொந்த பந்தம் சேர்ந்தது
சூக்குமமும் புரிந்தது
சிந்தையிலே சின்மயம்
இந்த நாளில் சூழ்ந்தது!
பந்த பாசம் பொய்யென்பார்,
பகல் கனவு எனப் பகர்வார்!
பந்தமில்லை பகல் கனவில்லை
பந்தபாசமெல்லாமும்
பரம்பொருளின் வடிவமென
உந்தியிலே உள்ள உண்மை
புந்தியிலே புலர்ந்தது!
ஜீவன் நான் சக்தி அவள்
சேர்வதுதான் பூஜையென
ஜன்மத்தை தொலைக்குமந்த
ஸபர்யையும் சொன்னது!
கோபதாப மனித குணம்
கொதிக்கும் சில நேரங்கள்!
நாமதற்கு பிறந்தமோ
காம கர்த்தா மன்யு கர்த்தா
நவிலுமந்த நான்மறை!
மோதலுக்கு வாழ்விலை
காதலுக்கே வாழ்க்கையாம்
நேசமிகு நட்புடன்
நீண்ட நாட்கள் வாழுவோம்!
பாச பந்தம் போற்றியே
பல்லாண்டு வாழுவோம்!
அங்காள ஆண்டவள்
அனுக்ரஹம் செய்யட்டும்!

Loading

admin

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments