பாசமுடன் ஓர் கவிதை !

பாசமுடன் ஓர் கவிதை !
அன்புக்குத்தான் அனைவருமே
அகிலத்திலே ஏங்குகிறார்,
வள்ளுவரும் விளக்கமாக
திருக்குறளினிலே கூறுகிறார்.
தன் மக்கள் மீது அன்பினாலே
மாதாவும் தினம் உழைக்கின்றாள்,
தன் மகனை உயரவைக்க
தந்தை தினம் அலைகின்றார்,
மனைவி மீது அன்பினாலே
கணவன் காதல் செய்கின்றான்,
கடமை தான் பெரிது என்று
நாட்டின் மீது அன்பு வைத்து
நல்லவர்கள் உழைக்கின்றார்,
இப்படி அன்பிற்கே அனைவரும்
இவ்வுலகில் வாழ்கின்றார்,
இதற்கிடையில்
அன்பை விட்டு வம்பு செய்யும்
அரக்க குணம் ஏன் வரவு?
காதலிலே கொலை வெறியை
கட்டவிழ்த்து விட்டது யார் ?
மெட்டமைத்து பாடுகின்றோம்
மென்மையினை ஏன் மறந்தோம்?
காதலியை காக்க வைத்து
பாதகன் என திட்டியதால்
காதல் பாட்டு அது
கொலைவெறிக்கு தூண்டியதோ?
அளவுக்கு மிஞ்சிவிட்டால்
அன்பு கூட வம்புதானோ?
அஞ்சு ரூபாய் லஞ்சம் இங்கு
2ஜி வரை வந்ததேனோ?
அடித்துக் கூறிடலாம் !
அன்புதான் காரணம் என்று !
பணத்தில் வைத்த அன்பு
குணத்தை கொன்று போடும் !
நடத்தையில் அன்பு வைத்தால்
நாட்டிற்கு நன்மையாகும் !
எனவே
வெறித்தனமாய் அன்பு வேண்டாம் !
விவேகமும் கலக்க வேண்டும் !
நேர்மையும் நன்நெறியும்
அன்பிடையே வளரவேண்டும் !
மனைவியிடம் ஒரு பொய் சொல்லி
மறைத்திடலாம் ஒரு நூறு ரூபாய் !
மறையவேண்டும் இந்த எண்ணம் !
தெரியாது என்றால் கூட
உண்மையினை உரைக்க வேண்டும் !
தெய்வம் ஒன்று இருக்குதென்று
இதற்குத்தான் சொன்னார் முன்னோர் !
எப்போதும் என்னையிங்கு
இறைவன் பார்க்கிறான் என்ற
எண்ணத்தை வைத்திட்டால்
ஏமாற்றும் போக்கு இங்கு
எப்போதும் வந்திடாது !
ஏமாற்றி அரியணையில்
அமர்ந்திடலாம் என்ற எண்ணம்
எவருக்கும் வந்திடாது !
மென்மை மனம் கொண்ட பேரை
மிக எளிதாய் மயக்கிடலாம் என
மக்களுக்கு இந்த எண்ணம்
மறையவேண்டும் அன்பினாலே !
தரையினிலே நாம் பிறந்தோம்
தாய்ப்பாசம் தனை அறிவோம் !
கொட்டம் போடுதற்கோ
குவலயத்தில் நாம் வந்தோம் ?
கூடி வாழ்வதற்கே
குவலயத்தில் நாம் வந்தோம் !
தவறாக எண்ணவேண்டாம்
தாயன்பால் கூறுகின்றேன் !
மாய வலையில் மயங்கி
மனித நேயம் மறக்க வேண்டாம் !
பொருள் தன்னில் மயங்கி இங்கு
பண்பு அதை புதைக்க வேண்டாம் !
பணம் போனால் திரும்பி வரும் !
பண்பிழந்தால் போனதுதான் !
கொலை செய்ய வந்தபோதும்
கும்பிட்டு வணங்கி அவர்
கால்தொட்டதெங்கள் குலம் !
நாயன்மார் என்றவரை
நவின்றிட்டதேன் மறந்தோம் !
முன்னோர் வாழ் நெறியை
இன்னாள் நினைந்திடுவோம் !
பன்னாள் பொறுத்திருந்து
படைத்த கவி இதுவே !
பாரீர் ஏற்றிடுவீர்
பாசம் உண்டன்றோ?

Loading

admin

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments