மெட்டு : செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
(பாடல் சிவபெருமான் பற்றியது)
சென்னாகப் பூவை சூடிடும் வேந்தன்
என் மீது பாருமப்பா
பூ மீதில் ஆசை போகுதப்பா
உன்மேலே வாடை வீசுதப்பா
அப்பப்பா ஆனந்தம்
களைந்து களைந்து போகும்மாயை
எந்தன் மோக பாந்தமோ
தயங்கி தயங்கி செல்லும் உள்ளம் கருவங்
கொள்ள லாகுமோ
ஆலமரததடி மேலே ஒளி வான் வெளிதிலே வீசுது
சிகை தனில் பாவம் இன்றி கங்கா மெல்ல போகுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்
சென்னாகப் பூவை சூடிடும் வேந்தன்
என் மீது பாருமப்பா
பூ மீதில் ஆசை போகுதப்பா
உன்மேலே வாடை வீசுதப்பா
அப்பப்பா ஆனந்தம்
அழகு மிகுந்த ராஜகுமாரன் வேகமாக போகிறான்
ஜடையும் புலியும் உடலில் கொண்டு
கலையை மீள செய்கிறான்
உள்ளம் சில கள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி
சென்னாகப் பூவை சூடிடும் வேந்தன்
என் மீது பாருமப்பா
பூ மீதில் ஆசை போகுதப்பா
உன்மேலே வாடை வீசுதப்பா
அப்பப்பா ஆனந்தம்
இளைய பருவம் உடலில் வந்தால் ஏனாம் கர்வ சிந்தனை
பனியில் வசிக்கும் பரத்தின் காற்று அப்பன் செய்த நிர்ணயம்
வீட்டை தரும் வேந்தன் பாட்டு வான வெளியில் வாருது
உள்ளெ வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி
சென்னாகப் பூவை சூடிடும் வேந்தன்
என் மீது பாருமப்பா
பூ மீதில் ஆசை போகுதப்பா
உன்மேலே வாடை வீசுதப்பா
அப்பப்பா ஆனந்தம்
![]()




Users Today : 26
Users Yesterday : 88
Total Users : 58602
Views Today : 228