அழகானவள்
இன்பமுடன் என்றும்
இன்முகம் கொண்டவள்
பல்வகை பண்டம் செய்து
இல்வாழ்வை இனிக்கச்
செய்பவள்
அம்மா அப்பா என்று உறவை
என்வாயில் வர வைத்தவள்
விருந்தினர் வந்தால்
கருத்தோடு அவரை
கவனிப்பவள்
ஆதிக்கொரு சமையல்
அனுதினம்
அலுக்காமல் செய்விப்பவள்
வெறுப்புற்ற என்மனதை
விருப்பாக மாற்றி
வெற்றிபெற செய்தவள்
காலைச்சமையலிலே
கனக தாராவை
முனுமுனுப்பவள்
சுத்தம் மறப்பவரை
கத்தி தீர்த்திடுபவள்
உத்தியோகம் பார்ப்பதிலே
மெத்தனமென்றும்
காட்டாதவள்
மைதிலியென்ற
பெயர் கொண்டவள்
பிறந்த இந்த நாளில்
என் கவி கண்டவள்
புவிமீதில் என்றும்
புகழ்பெற்று விளங்க
இப்புதுக்கவிதை தந்தேன்
அதில் பொருளானவள்
அன்புடன் பிறந்த நாள்
வாழ்த்துக்களுடன்
![]()



Users Today : 37
Users Yesterday : 78
Total Users : 55644
Views Today : 154