விரும்பிய தனிமை
எனக்கு தனிமையில் நாட்டம்,
சிறுவயதில் அம்மாவின் அரவணைப்பு
கொஞ்ச நேரம் கூட தனிமையில் விடமாட்டாள்.
பள்ளி சென்றேன்,
ஆசிரியர் மாணவர்கள் கூட்டம்,
அங்கேயும் தனிமை இல்லை
வாலிப வயதில் நண்பர் கூட்டம்
விரும்பிய தனிமை விலகியே இருந்தது
திருமணம் ஆனது பிறகேது தனிமை
பத்து நிமிடம் தனிமையில் இருந்தால்
பத்து முறை மனைவியின் அழைப்பு
விரும்பிய தனிமை விலகியே இருந்தது,
குழந்தைகள் பிறந்தன,
கொஞ்சியே போனது கொஞ்ச நேரமும்,
விரும்பிய தனிமை விலகியே இருந்தது,
பள்ளியில் பதிவுகள் கல்லூரி அலைச்சல்கள்
விரும்பிய தனிமை விலகியே இருந்தது,
பின்பு வயதானது
அவர்களுக்கும் பொருத்தம் பார்த்து
பதமான திருமணம்
பிறந்தன அவர்களுக்கும் குழந்தைகள் பலவாய் பார்த்துக்கொள்ள போனது நேரமும்,
விரும்பிய தனிமை விலகியே இருந்தது,
இன்று
எனக்கு வயது அறுபத்தி ஐந்து
முதுமை பார்த்தது முகத்தில் பதத்தை
அவரவர் வழியில் அவரவர் சென்றனர்.
கூட்டம் விட்டு தனிமையில் வீழ்ந்தேன்,
ஆனால்
இன்றோ விரும்பாத தனிமை
விரைவாய் வந்ததே
அரவணைப்பு வேண்டி
அண்மையில் இருந்தும்
விரும்பாத தனிமை விரைவாக வந்ததே
இறைவன் சித்தம் இப்படியே இருக்கட்டும்,
![]()




Users Today : 10
Users Yesterday : 65
Total Users : 52081
Views Today : 17