யார் முதல்?
புழுதான் முதலென்பார்,
புழுவுக்கு மண் வேண்டும்!
மண்தான் முதலென்றால்
மண்ணுக்கு நீர் வேண்டும்!
நீர்தான் சரியென்றால்
நீருக்குள் நெறுப்புண்டு!
நெறுப்புதான் பொறுப்பென்றால்
காற்றுதான் கலைத்து விடும்!
காற்றுதான் மேலென்றால்
வெட்டவெளி பரவி நிற்கும்
வெட்டவெளி மத்தியிலே
சுட்டுனிற்கும் சூரியனும்!
சூரியனோ சுற்றி வரும்!
நவகோளும் முதலென்றால்
நவகோளும் தினம் நகரும்!
கோளறு பதிகம் செய்த
பக்தர்தான் முதலாமோ
பக்தருக்கு முக்தி தரும்
பரமனவர் முதலாமோ?
பரமனவர் முதல்வரெனில்
இரந்து வாழும் வாழ்க்கையாமே!
வரம் தரும் இறைவி முதலோ
சிரம் வைக்கும் (பகா)அசுரனுக்கு
திரைபோட்டு மறைந்திடுவாள்!
இரை தின்னும் அசுரர் முன்னோ?
மறை நான்கும் மறுத்து விடும்!
மறை முதலோ என்று சொன்னால்
வேதியரின் வாக்கில் நிற்கும்!
வேதியர்தான் முதலென்றால்
வேந்தர்களை அண்டி நிற்பார்!
அரசனவன் முதல் என்றால்
மந்திரியின் மதி உயர்வு!
மதிமந்திரியே முதலென்றால்
மக்களுக்கு அவர் சேவகர்தான்!
மக்கள்தான் உயர்வென்றால்
மக்களுக்கு மண் வேண்டும்!
மண் முதலோ இல்லை இல்லை!
மண்ணுக்கு உரம் சேர்க்கும்
மண்புழுவே முதலாகும்!
இதில் யார் முதல்?
முதலிலிருந்து படியுங்கள்!
யார் முதல் என்று புரியும்!
![]()




Users Today : 14
Users Yesterday : 62
Total Users : 52194
Views Today : 18