இன்னமும் தயவில்லையா
ராகம் : தோடி …. தாளம் : ஆதி
இன்னமும் தயவில்லையா
எந்தன் குருநாதா உனக்கென்மீது (இ)
தொடுத்து மலருன் பாதம்
அடுத்து அலங்கரித்தேன்
கடுத்த கர்ம வினைகளை
தடுத்து அருள உனக்கு (இ)
எடுத்த பிறவிக்கு ஏதும் கணக்கு வைத்ததுண்டோ
படுத்தும் மாயைக்கு பக்கம் வரதுணிச்சலுண்டோ
கொடுத்த மந்திரம் கோடி தரம் ஜபித்தேனே
தடுத்தாட்கொள்ள திருவுள்ளம் சிறிதுண்டோ (இ)
இந்த பிறவியே உனக்கினி கடைசியென்று
பந்த பாசம் அகற்றியே பகல எண்ணமுண்டோ
தொந்தம் அகற்றியே சொந்தம் நீயென்று சொல்லமனமுண்டோ
விந்தையான உலகில் வேணகர்மம் செய்தலைந்தேன் (இ)
![]()





Users Today : 11
Users Yesterday : 65
Total Users : 52082
Views Today : 20