தரிசனம் தருவாயா – புவனேசுவரி பாடல்
பல்லவி
தரிசனம் தருவாயா தாயே புவனேச்வரி
புரிபட வேணும் உந்தன் பக்குவம் (த)
அனுபல்லவி
பரிபக்குவம் நான் அடைந்திடவேண்டும்
சரியை கிரியை சரியாய் செய்திட வேண்டும் (த)
சரணம்
தூலத்திலே அந்த ஒரு சூக்குமத்திலே
காலத்திலே காலம் கடந்தவொரு மூலத்திலே
நீலத்திலே வான் திகழ் வண்ணத்திலே
சீலத்திலே உனை நான் சேரும் வண்ணம் (த)
வருவாய், வந்து நீ என்னுள்ளம் அமர்வாய்
தருவாய், தந்து நீ எனக்கருள் புரிவாய்
குருவாய், வந்து நீ குணமது அருள்வாய்
சருகாய் காயுமுடல் அதற்கு முன்னே வந்து (த)
![]()



Users Today : 37
Users Yesterday : 78
Total Users : 55644
Views Today : 140