கடவுள் பக்தர்கள்
கண்ணில்லாமல் துதித்தவர் சூர்தாஸர்
கண்ணையே எடுத்து அப்பியவன் கண்ணப்பன்
கல்லால் கோயில் எழுப்பியவர் ராமதாசர்
கல்லால் அடித்து தொழுதவன் சாக்கியன்
பிள்ளையிலேயே பாடித்தொழுதவர் சம்பந்தர்
பிள்ளையையே கறிசமைத்தவர் சிறுத்தொண்டர்
குங்கிலியத்தால் தொழுதவர் கலயர்
மங்கையைத் துறந்து தொழுதவர் நீலகண்டர்
தினம்தினம் பாட்டால் தொழுதவர் திருமூலர்
கனம்தரும் பூங்குழலாளைப் பணிந்தவர் பட்டர்
வீட்டைத் துறந்து வணங்கியவர் பட்டினத்தார்
மாட்டை விலக்கி வணங்கியவர் நந்தனார்
கர்நாடகத்தால் பாடித்தொழுதவர்கள் மும்மூர்த்திகள்
கர்நாடகத்தில் பாடித்தொழுதவர் புரந்தரதாசர்
![]()




Users Today : 33
Users Yesterday : 31
Total Users : 52244
Views Today : 41