புதுக்கவிதையில்பாபநாசம் சிவன்
இவர்
பசிக்கு பாடல்
எழுதினாலும்
பாடலின் ருசி
குறையவில்லை!
அம்பா மனம் கணிந்து
கடைக்கண் பார்த்தாள்
அவர் பாடல் அருள்
பெற்றது!
போலகம் சிவன்
பாபனாசம் சிவனானது
கணபதி அக்ரஹாரத்தில்!
சங்கீத மும்மூர்த்திகள்
என்று யார் சொன்னது?
சிவனோடு சேர்த்து
சதுர்மூர்த்திகள் அல்லவோ!
குசேலராய் நடித்தார்
குசேலராய் வாழ்ந்தார்
அதனால்தான்
ருக்மணி இவர்
மகளாய்ப் பிறந்தாளோ?
இவர் உஞ்சவிருத்தி
எடுக்கையில்
இவர் பாடலில் மெய்மறந்து
அரிசியிட மறந்து
விட்டனர் போலும்
ஏழ்மையிலேயே
இவர் வாழ்க்கை!
மயிலைக் கபாலியை
இவர் பாடினார் மோஹனத்தில்!
அதைப்பாடினால்
மோஹித்து
கயிலைக் கபாலியே
இறங்கி வருவார்!
பிக்ஷை எடுத்து வாழ்ந்தனர்
அந்த சிவனும்
இந்த சிவனும்
அன்னபூரணியின்
கடாக்ஷம்
இருவருக்கும்!
இவரின் தமிழ்ப்பாடல்களின்
இனிமையில்
வடமொழிக்குப்
பொறாமை!
தீர்த்து வைத்தார்
வடமொழி
கவியிலக்கணம் இயற்றி!
ராமனைத் தமிழில் பாட
தியாகய்யர்
இராமதாசராய்
வந்து விட்டார் போலும்
அதனால்தான்
நிதிசால சுகமில்லையோ?
இவருக்கு
சரீரம் மெலிது!
சாரீரமோ பெரிது!
இவரது சங்கீதம் அரிது!
தமிழிசையின் முத்து சுவாமி தீக்ஷிதர்
மும்மூர்த்திகளுக்கு பின் வந்த தென் மூர்த்தி
மயிலாப்பூரில் வசித்த இன்னொரு (மோகன) கபாலி
![]()



Users Today : 9
Users Yesterday : 47
Total Users : 52127
Views Today : 81