இன்றைய உலகில் அலைபேசியின் ஆப்புகள் (app-செயலி) எல்லாவற்றையும் செய்கிறது. அதை பற்றிய ஒரு சிலேடை (இரட்டுற மொழிதல்)
வெண்பா.
கூப்பிட்டால் ஏனென்னும் தேனீர் தருவிக்கும்
அப்பப்பா என்றும் அருகிலுறும் – செப்பிட்ட
காப்பிலுறும் காதில் கிசுகிசுக்கும் கண்ணயரும்
ஆப்பும் மனையாளும் ஒன்று
விளக்கம் :
செப்பிட்ட காப்பிலுறும் : செயலி செப்பினாலான கைபேசியில் உள்ளது. மனையாள் செம்பினாலான காப்பை தரித்தவள். கண்ணயரும் : silent mode. மற்றவை வெளிப்படை.
![]()




Users Today : 118
Users Yesterday : 188
Total Users : 46345
Views Today : 370