வங்கியில் பலகோடி திருட்டு – செய்தி.
யார் சொன்னது?
பலகையில்
பத்து ரூபாய் பேனா
நூலில் கட்டியபடி
பாதுகாப்பாய்.
ஆழ்கடலுக்கு தெரியாது
அலையின் ஆரவாரம்
அலைக்கு தெரியாது
ஆழ்கடலின் அமைதி
இடைவெளி
இல்லாத போதும்
காவிரிக்காக நீதி மன்றத்தில் வழக்கு
அதிரடி தீர்ப்பு சொல்லிவிட்டது
காவிரி
தலைப்பு
கவிஞன் தேடுகிறான்
இலக்கியத்தில்.
புடவைக்கடையில் மனைவி.
இப்படியும் எழுதலாம்.
தலைப்பு ஒன்றுதான்.
கவிஞன்
இலக்கியத்தில் தேடுகிறான்.
அவன் மனைவி
புடவைக் கடையில்
தேடுகிறாள்.
வெள்ளிக்கிழமை
பா வகை : குறள் வெண்பா
வாரம் முழுதும் உழைப்பார் விரும்புவது
வெள்ளிக் கிழமை யது
ஹைக்கூ 1 :
நாளை விடுமுறை என்ற நினைப்பில்
வெறுப்பின்றி போனது
வெள்ளிக்கிழமை
ஹைக்கூ 2 :
விறகடுப்பு எரியவில்லை
ஏழையின் வீட்டில்
வெள்ளிக்கிழமை விரதமாம்
செல்லை விடுத்திரு சீராகும் வாழ்வு
வெள்ளிக் கிழமை யது
ஹைக்கூவில் சுந்தர காண்டம்
சாதனை செய்ய எண்ணிவிட்டால்
கடல் கூட கடுகுதான்
சுந்தர காண்டம்
கண்டேன் சீதையை
இராமனை காத்த
ஹைக்கூ
சிவ சிவ என்றான் இராவணன்
இராம இராம என்றான் அனுமன்
அதிகாரி பேதம்
அசோக வனத்தில்
உயிர் விட துணிந்தாள் சீதை
ஆம்புலன்ஸ் அனுமன்
ராமனுக்கு வரைந்தாள் மடல்
மின்னஞ்சல் முகவரி
கணையாழி
ஏழைக்கவிஞன்
பாலைவனமாய் வாழ்க்கை.
எழுதும் கவிதைதான்
பாலைவனத்தில் ஓர் சோலை.
கானல் நீராய் பரிசு
கடன் தொல்லை
சூரியனிடம் ஒளியை கடன் வாங்கியது நிலா
ஒளிந்து கொண்டு
இரவில் மட்டும் வெளியே வருகிறது.
திருப்பி கேட்டு விடுமாம்
உண்மை
டார்வின் கொள்கை உண்மைதான்
அனைவருக்கும் வால் இருப்பதால்
பேஸ்புக்கில்
மணம்
பத்து ரூபாய்க்கு பூ வாங்கினேன்
மணம் வீசியது
ஒரு ஏழை குடும்பத்தில்
வேண்டுதல்
(இலையுதிர் காலத்தில்)
மொட்டை போட்டது மரம்.
வெட்டாதீர்கள் என்று
கடவுளிடம் வேண்டுதலோ?
முழிப்பு
நேரம் இரவு பத்து மணி
முழித்து கொண்டனர்
வாட்சப் உறுப்பினர்கள்
சுமை
தந்தையின் கைப்பையை சுமந்த போதுதான் தெரிந்தது
அவர் சுமந்தது
பணத்தை மட்டுமல்ல என்று
மணமும் மரணமும்
ரோஜா வீசுகிறது மணம்
நாளை அதில் ர இணையும்
என்பது தெரியாமல்
கழிவுகள்
ஜீவ நதிகள் சாக்கடையானது கழிவுகளால்.
மனித மனமும்தான்
அணுகுண்டு சோதனை
வல்லரசானதாம் நாடு
வறுமை கோட்டிற்கு கீழே
விவசாயி
இலவசம்
நாளைக்கு அரிசி இல்லை
சமையலுக்கு
இலவச க்ரைண்டர்
வாங்க கியூ
வாட்சப் உலகம்
உலகம் என் சட்டை பையில் என்றான்
கைபேசியை கையில் வைத்து.
நிஜ உலகம் எட்டப்போனது தெரியாமல்
வரம்
பிள்ளை கறி வேண்டும்
சிறுத்தொண்டரிடம்
கேட்டானாம் இறைவன் தோன்றி
சிலையாகவே இரு இறைவா
ப்ரசாதம்
தென்னையின் காலில்
தண்ணீரால் அபிஷேகம்
கிடைத்தது ப்ரசாதம்
இளநீராய்
வரவேற்பு
காலால் மிதித்தாலும் வீட்டிற்குள்
வரவேற்பு
மிதியடி
விலகல்
இருவருக்கும் சண்டை
முடிவு
விலகி விட்டார்களாம்
வாட்சாப் க்ருப்பில்
தலைப்பு : அன்பு
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?
அழைப்பு மணி அடித்தேன்
உண்டு என்கிறது கதவு
(நாகசுந்தரம்)
தலைப்பு : நாற்றும் நடப்பும்
நாற்று நடப்பு
விவசாயி நம்பிக்கையுடன்,
நாளை நீர் வரும் என்று.
நாட்டு நடப்பு தெரியாமல்
ஹரிச்சந்திரன்
அரசை இழந்தான்
மனைவி மக்களை இழந்தான்
உண்மையை இழக்கவில்லை
அன்றைய அரசியல்வாதி
சுடுகாட்டை காத்தான்
உண்மைக்கான விலை
சற்று அதிகம்தான்
கருமான் வேலை
போட்டு எரித்தான்
பொய்மையையும் சேர்த்து
மனைவி மக்களை
தவிக்கவிட்டான்
ஆனாலும்
அவன் இல்லறம்
நல்லறமானது.
வியப்புதான்
ஒரு பொய் சொல்லியிருந்தால்
அன்று வாழ்ந்திருக்கலாம்
ஆனால் இன்றும் வாழ்கிறான்
அது உண்மையின் உயர்வு
பொதுவுடைமை
கம்யூனிஸ்ட்கள் இனி
கடவுளை கும்பிடலாம்
கடவுள்
அனைவருக்கும் துன்பத்தை
பொதுவுடைமையாய்
வைத்ததனால்
வானளாவிய கட்டடம்
உள்ளே உரிமையாளர்
குளிர் சாதனத்தில்!
வெளியே கட்டிய தொழிலாளி
கட்டிய துணியுடன் அடுத்த
கட்டடத்தை நோக்கி!
மோனம்
தன்னை தான் அறிந்து கொள்ளும்
நீண்ட சொற்றொடர்.. மோனம்.
பரிசோதனை
இரயிலில் பரிசோதகர் !
கையில் பட்டியல் !
கவனமுடன் டிக் செய்தார் !
பயணச்சீட்டு
வாங்கியவர்களின் பெயர்களை!
நடிகன்
நாடகமே உலகம் என்று
நானுணர்ந்தபோது
நாடக மேடையின்
திரை மூடப்பட்டுவிட்டது
நான் என்ன செய்ய?
![]()



Users Today : 9
Users Yesterday : 47
Total Users : 52127
Views Today : 70