ஐயன் திருவருள் வாழி

பூஜ்யஸ்ரீ காமேச்வரானந்தநாதர் என்கிற ஸ்ரீஅருட்சக்தி நாகராஜன் அவர்களுக்கு  01-11-2011 (தீபாவளி ஹஸ்தம்) அன்று 75 வயது தொடங்குவதை நினைவு கொண்டு
ஆயிரம் பிழை செய்தாலும் மருவாராதணைத்தணைத்து
மாயையின் மயக்கம் தீர மாஅமுதூட்டிஊட்டி
காயென இருந்த என்னை கனிந்திடப்பார்த்து பார்த்து
சேயென வளர்க்கும் என் ஐயன் திருவருள் வாழி வாழி
ஹே ! குருநாதா உங்களை நான் பார்த்தேன் !
எனது பார்வை நன்றானது !
நீங்கள் என்னைப் பார்த்தீர்கள் !
உங்கள் பார்வை அருள் பார்வை ஆனது !
நான் உங்கள் அருள் பார்வையில்
நனைந்து நன்றானேன் !
நீங்கள் எனக்கு அன்னையின் மந்திரம் சொன்னீர்கள் !
மந்திரம் ஜபிக்க ஜபிக்க
மாதா தெரிவாள் என நினைத்தேன் !
என்ன தந்திரமோ தெரியவில்லை !
மாதாவின் உருவில் நீங்களே தெரிந்தீர்கள் !
பொருள் வேண்டி உலகில் அலைகின்றேன்!
அருள் வேண்டி சிறிதேனும் அலைந்தேனோ?
இருந்தும் எனது வாழ்வின் பொருளாக
இருப்பதும் நீங்களே !
பொருள் வேண்டி எனது சக்தியெலாம்
போக்கினேன் !
ஆனால் நீங்களோ எனக்கு அருள் தந்து
அவனியிலே அழகாக்கினீர்கள் !
அருட்சக்தி என்ற பெயரைக்கொண்டதாலோ
பொருளுக்கு அலையாதே என
அருள் தந்து
அவனியிலே அழகாக்கினீர்கள் !
அன்று
பாலையின் வேள்வியில்
அவள் தாளினில் தஞ்சம் அடைய வைத்தீர்கள் !
இன்று
தஞ்சைத்தரணியிலே
அவள் தாயிடம் தஞ்சம் அடைய வைத்தீர்கள் !
பஞ்சாகப் பறந்தது பாவங்கள் !
கண்துஞ்சாது கிடைத்தது காக்ஷிகள் !
ப்ரமாண வசனப்படி நடக்கவேண்டும் !
இது ஸ்ரீவித்யா தர்மம் !
அதன்படி
ஆயிரம் நாமாவால்
அருச்சனை அன்னைக்கு செய்தீர்கள் !
ஆன்ற குருவிற்கு சித்திரம் செய்தீர்கள் !
அதற்கு ஆதாரம் அவரின் அருள் ரஹஸ்யம் !
சண்டியின் சரிதத்திற்கு சாத்திரம் செய்தீர்கள் !
அதுவோ மஹாசக்தி ரஹஸ்யம் !
அருளின் ரஹஸ்யத்தை அனைவரும் அறியச்செய்தீர்கள் !
அது உங்கள் கருணையின் ரஹஸ்யம் !
சிதானந்த அலையில்
பத்ததியின் பரம ரஹஸ்யம் பகர்ந்தீர்கள் !
அதனைப் படித்தால்
அனைவருக்கும் புரியும்
அன்னையின் ரஹஸ்யம் !
அவள் அன்னை மட்டுமல்ல !
தனக்குள் இருக்கும் தத்துவம் !
அந்த தத்துவம் அறிய
தன்னை அறியும் தனிக்கலை என்று
கட்டுரை எழுதி வருகிறீர்கள்.!
அது வேதாந்தத்தின் ரஹஸ்யம் !
மஹிமை என்ற ஆசனத்தில்
மங்களமாய் அமரவைத்து எதிரில்
மனமென்ற பாத்திரத்தில்
வ்ருத்தி என்ற அர்க்யம் வைத்து
பக்தி என்ற மலராலே
பராவென்ற சக்ரத்தில்
பக்குவமாய் போடவைத்து
திக்கெல்லாம் தியாகம் என்ற
தத்துவத்தை உணர வைத்து
பூஜையும் வேள்வியும்
பாரிதிலே செய்ய வைத்தீர்கள் !
கோடியிலே ஒருத்தராக
கோடியிலே இருந்தாலும்
பாடிவிட்ட காரணத்தால்
பரத்தை
கூடிடவே வைத்திட்டீர் !
வாடிநின்ற மனம் மாறி
தேடிவந்த திருவருளை
நாடிவிட்டோம் நாங்கள் இன்று !
நல்ல வழி காட்டிவிட்டீர் !
நன்றாக வாழ்த்துகின்றோம் !

Loading

admin

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments