அருள் பஞ்சக அந்தாதி.

அருள் பஞ்சக அந்தாதி.
நமது பூஜ்ய ஸ்ரீ அருட்சக்தி குருநாதரின் எண்பத்தியோராம்  அகவை ஆண்டில் (நாளை 01-11-2018) ஆக்கியது
(அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
இன்முகம் என்றும் கொண்(டு)
இனியவை பேசும் வாக்கால்
அன்பெனும் ஆன்மபோதம்
அனுதினம் தந்த அருட்சக்தி குருநாதா
பன்முகக் கலைஞரான பகலவன்
போல வாழ்ந்து நித்தம்
என்னுடை அறியா குணத்தை
அரிந்துநீ அகற்று வாயே –                                                            1
வாய்த்தவோர் ஆசான் இங்கே வாழ்வது நமக்காம் அறிவீர்
பொய்மையை என்றும் பேசா புலவராம் பாரும் புகழும்
ஆய்ந்து அறிவால் ஆக்கிய உரைகள் அதிகம் அதிகம்
உய்ந்திடும் வழியை உணர்த்தி ஊக்கமது தருவார் நித்தம்
காய்ந்திடும் தீயாய் கோபம் கர்மத்தை விட்டால் வருமே -2
வருமே வேகம் வாக்கில் வேதியர் நெறியை மாற்றின்
தேருமே தகைமை என்றும் தத்துவம் பூசையின் முடிவில்
கூறுமே கருணை எங்கள் குலகுரு தாங்கள் தானே
பெறுநாம் பெற்று விட்டோம் பாக்களால் பாடி நிற்போம் -3
ஒமெனும் மந்திரம் ஜபித்து உள்ளத்தில் உவகை எய்தி
தாமேனும் அகந்தை நீக்கி தற்பதம் தன்னுள் கண்டு
நாமேனும் பொதுவின் நோக்கம் நானிலம் நாங்கள் கொள்ள
காமேச குருவே உந்தன் காலடி பணிந்தோம் நித்தம் -4
நித்தமாம் மோட்சம் தந்து நீவாழி நிலத்தில் ஆண்டு
பித்தமாம் பரத்தின் இச்சை சீடராம் எமக்கு உண்டு
உத்தமதான புரத்தின் உத்தமி உந்தன் துணைவி ஈண்டு
வித்தையின் மூலம் நீங்கள் வாழிய பல்லாண்டு இன்முகமாய்

Loading

admin

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments