பஞ்சதசி வாக்கியம்
(பஞ்சதசி வித்தையின் முதல் எழுத்தை கொண்ட விருத்தங்கள்)
(சந்தம் : சிவவாக்கியர் சித்தர் பாடல்)
ககாரமென்று செப்புவேன் கருணை மனிதில் வந்திடும்
மகாரமென்று செப்புவார் மனதுதானே அருக்கியம்
விகாரமான மாய்கையும் வீடுவிட்டு மாய்ந்திடும்
ககார முதலாம் மந்திரத்தை காதில் சொன்னார் குருவுமே
ஏகாந்தமாக இருக்கிறேன் எதிரே வந்தாள் இறைவியும்
ஆகாயமெல்லாம் அவளலோ அந்தமிலா பிரம்மமும்
பகலும் இரவும் பஞ்சதசி பரத்தில் ஒன்றி நிற்குமே
ககார முதலாம் மந்திரத்தை காதில் சொன்னார் குருவுமே
ஈகாரமென்றால் இறைவியும் எதிரே வந்தமர்வளே
சுகத்தை தரும் மந்திரம் சூக்குமத்தை அறிவரோ
பகத்தை பக்கம் வைத்திடில் பரத்தை காணலாகுமே
ககார முதலாம் மந்திரத்தை காதில் சொன்னார் குருவுமே
லலனம் செய்யும் லலிதையை லகுவாய் காணலாகுமோ
பலபல பிறவி எடுத்து பாதை வகுக்க வேண்டுமே
கலகலக்கும் மாய்கையும் ககார முதல் ஜபித்திடில்
ககார முதலாம் மந்திரத்தை காதில் சொன்னார் குருவுமே
ஹ்ரீம்கார வடிவினள் கருத்தினுள்ளே வைத்திடில்
பராபோதம் வந்திடும் பாரும் கண்ணில் மறைந்திடும்
தராதரம் பார்த்துதானே தாயும் உன்னுள் தோன்றுவள்
ககார முதலாம் மந்திரத்தை காதில் சொன்னார் குருவுமே
ஹசந்தி வந்தால் பயமகலும் பத்ததியும் கூறுமே
அசந்து நின்று போய்விடாதே ஆவலுள்ளே கொண்டிடு
கசந்து போகும் வாழ்வில் என்றும் கருத்தை வைக்கலாகுமோ
ககார முதலாம் மந்திரத்தை காதில் சொன்னார் குருவுமே
ஸரஸமாடும் ஸரஸ்வதி என்றும் உண்மை செப்பினால்
உரசிப்பார்க்கும் தங்கமாய் உள்ளம் மாறிப்போகுமே
பரபரக்கும் வாழ்க்கையை பார்த்து பயந்தாலாகுமோ
ககார முதலாம் மந்திரத்தை காதில் சொன்னார் குருவுமே
கருப்பும் சிவப்பும் கலந்தவள் காஞ்சியிலே உறைபவள்
பருப்பும் பாலும் படைத்து நிற்க பக்குவத்தை அருள்பவள்
திருவடியை பற்றினால் உருவை உன்னுள் உணரலாம்
ககார முதலாம் மந்திரத்தை காதில் சொன்னார் குருவுமே
ஹயவரடு என்று கூறி அண்டமிதை ஆக்கினாள்
பயம்வராது பக்தருக்கு பாதமதை பற்றினால்
துயரிலே துடிக்கும் மாந்தர் துன்பம் நீக்க வேண்டுமே
ககார முதலாம் மந்திரத்தை காதில் சொன்னார் குருவுமே
லபிக்கும் லக்ஷம் கூறினால் லக்ஷியத்தை விடுவனோ
அபீதகுச அம்பிகை அவளின் அமுதம் அருந்தலாம்
சபதம் செய்து இன்றுமே ஜபித்து நிற்பேன் மந்திரம்
ககார முதலாம் மந்திரத்தை காதில் சொன்னார் குருவுமே
ஹ்ரீமென்னும் அக்ஷரம் காதில் சொன்னபோதிலே
விரவிடும் வேதமெல்லாம் சாகையும் சூழுமே
துரத்திடும் மாய்கை விட்டு தூரதூர ஓடுமே
ககார முதலாம் மந்திரத்தை காதில் சொன்னார் குருவுமே
ஸகல மந்திர ஸாரமும் சீக்கிரமாய் உணரலாம்
பகலவனும் போற்றிய பதினைந்து அக்ஷரம்
சுகரும் சக்தி பண்டிதர்கள் சூக்குமமாய் சொன்னது
ககார முதலாம் மந்திரத்தை காதில் சொன்னார் குருவுமே
கற்ற வித்தை கடைசியில் காலனை துரத்துமே
பெற்ற மகன் போல பரதேவதை காப்பளே
சுற்றி சுற்றி வந்திடும் சுழற்சி நின்று போகுமே
ககார முதலாம் மந்திரத்தை காதில் சொன்னார் குருவுமே
லகுவான சூத்திரம் லக்ஷியத்தை அடையலாம்
சிகரம் தன்னில் சக்கிரம் சுற்றும்பாதை அறிவீரோ
நகரம் தன்னில் நடுவிருக்கும் கிருஹத்திலவள் அமர்வளே
ககார முதலாம் மந்திரத்தை காதில் சொன்னார் குருவுமே
ஹ்ரீஹ்ரீ என்று பாதி சொன்னான் ஓர் நரன்
பரிந்து வந்து அருளினாள் பாசம் தன்னை பாருமே
உருவையேற்றி கூறுவோம் உணர்வில் ஒன்ற வேண்டுமே
ககார முதலாம் மந்திரத்தை காதில் சொன்னார் குருவுமே
மனப்பாலம் அமைத்தாரிந்த
மேதினியில் வாழும் வகையன்றோ!
வனம்புக வேண்டாமிந்த
வியனுலகிலே வுள்ளதன்றோ!
கனம்மிகு மாயையிந்த
கரம்விட்டு போனதன்றோ!
சினம்மற வென்றேயிந்த
சாத்திரம் சொன்னதன்றோ!
பாருக்கும் ஸ்ரீபுரத்திற்கும்
பாலம் அமைப்போமந்த
தேருக்குள் அமர்ந்திருக்கும்
தேவதை காண்போமன்றோ!
பேருக்குள்ளெ யிருக்கும்
பாதசலங்கை யொலியன்றோ!
சாரமில்லாயிந்த சம்சாரம்
சாரமிகுந்த தேனாமன்றோ!
ஸர்வஞரானகுரு வேதமதின்
சாரமதை தந்தாரன்றோ!
உர்வாருகம் போலயிந்த
உடலதை செய்தாரன்றோ!
தர்மவழி நிற்பாயென்றே
தத்துவம் சொன்னாரன்றோ!
கர்மவினையெல்லாம் ஒரு
வழியாய் கழிந்ததன்றோ!
பிறந்ததெல்லாம் போதுமென்று
பக்வமனம் தந்தாரன்றோ!
திறந்தவெளி பல்கழகமென
தரணி்க்குபதேசம் செய்தாரன்றோ!
கறந்தபால் கன்னெலென
காட்சியினை குடுத்தாரன்றோ!
மறந்தும் மனம்மீண்டும்
மாயையிலே மூழ்காதன்றோ?
![]()

Users Today : 26
Users Yesterday : 88
Total Users : 58602
Views Today : 260