விடிவெள்ளியான வித்யா ஸத்ரம்

விடிவெள்ளியான வித்யா ஸத்ரம்
அன்பென்ற தத்துவத்தை
அனைவரும் அறிய
உம்பரும் காண வந்த
உயரிய ஸத்ரம்
வித்யா ஸத்ரம்
ப்ரம்ம வித்யா ஸத்ரம்
என்புதோல் உடலிதிலே
என்றும் விளங்கும்
அன்புடைய பொருள்தான்
தெய்வம் என்னும்
அளப்பரிய தத்துவத்தை
அனைவரும் அறிந்தார்
அறிய வைத்ததுதான்
வித்யா ஸத்ரம்
ப்ரம்ம வித்யா ஸத்ரம்
கூடி நின்றார் கூட்டமாக
குலத்தில் பெரியோர்
பாடி நின்றார் பக்குவமாய்
பாட்டில் சிறந்தோர்
தேடி வந்த பொருள் தன்னை
தேற்றி பெற்றார் அந்த
வித்யா ஸத்ரம்
ப்ரம்ம வித்யா ஸத்ரம்
கண்ணுக்கினியதாய்
நாட்டிய தந்த்ரம்
விண்ணிற்கு எட்டுவதாய்
வேத மந்த்ரம்
பண்ணிலே அமைத்துனின்ற
பரதேவதையின் மன்றம்
அதுதானே ஆங்கமைந்த
வித்யா ஸத்ரம்
ப்ரம்ம வித்யா ஸத்ரம்
கேள்விக்கு பதில்பெறவே
கருத்தாய் வந்தோர்
உள்ளத்தில் உண்மையினை
உணர வந்தோர்
கள்ளம் கபடமில்லா
உள்ளம் பெற்றோர்
பள்ளத்தில் விழுவோரை
காக்கும் பெரியோர்
அனைவரும் கூடி நின்ற
வித்யா ஸத்ரம்
ப்ரம்ம வித்யா ஸத்ரம்
நடந்து அறுனூறு நாட்கள்
நாட்டிலே கடந்து நின்ற
நினைவை கொண்டு
நாளும் நல்லவராம்
நல்குருவைபோற்ற
பல்விதமாய் பாக்களுமே
பெறுகி நிற்க
லலிதையின் லாலனத்தை
லகுவாய் பெறவே
ஸத்திரமாய் கூடினிற்போம்
என்றும் நாமே
முடியவில்லை ஸத்திரம்
மாநிலத்தில் இங்கே
விடிவெள்ளி ஆனதப்பா
கூடிய ஸத்திரம்
படிப்பதற்கு முடிவுண்டோ
பாரில் சொல்வீர்

Loading

admin

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments