இன்றே இறைதாள் வணங்கிவிடு
கொன்றிட கூற்றுவன் வருமுன்னே
நாளை முறைனாள் வரலாமே
தாளை அதற்குள் துதித்துவிடு
காம க்ரோத மோஹங்கள்
நாமோ அதற்கு ஆஹாரம்
வேதாந்தமென விலக்காமல்
ஆதரவாக இணைந்துவிடு
போதும் பொறாமை பேய்க்குணங்கள்
சாதாரணமாய் வாழ்ந்துவிடு
இறைவன் படைப்பில் எல்லாமொன்றே
குறைநிறை காண நாமதற்கார்
குருவைக்கூட குறைசொல்லும்
பரபரப்பான உலகமிது
அருளை பெறவே நம்பிறப்பு
அதற்குள் ஏனோ இவ்வெறுப்பு
மனைவி மக்கள் சுற்றமெலாம்
மனதால் இறையென நினைத்துவிடு
கழித்தது போதும் பல நாட்கள்
விழித்துக்கொள்ள இது தருணம்
இருக்குது கோடி மந்திரங்கள்
உருஏற்றிட உனக்கு ஏன் தயக்கம்
புலமை ஏதும் தேவையில்லை
கலவை இருப்பவர் சொல்கேளு
சம்சாரம் என்பது பெருங்காடு
நிம்மதி தருவது இறைதாளு
மனமே மனமே என் சொல்கேளு
அன்னையின் நாமத்தை உருவேற்று
உலகத்தை திருத்த நாமில்லை
கலக மனதது நம் சொல்கேட்கும்
பேசுமுன் வார்த்தையை அளந்துவிடு
கூசிட வேண்டும் கொடுசொல் பேச
தணிகை முருகனை துதித்துவிடு
தணித்திடும் தாபத்தை படைவீடு
அங்காள அம்மன் நம் குலதெய்வம்
தங்கிடும் மனதினில் அவள் பூவாசம்
அன்னையாம் அவளது பாதத்தில்
உன்னையே அளித்து நின்றுவிடு
பின்னை பிறப்பை நீக்கிடுவாள்
தன்னை உணர்ந்திட தயை செய்வாள்
![]()



Users Today : 9
Users Yesterday : 47
Total Users : 52127
Views Today : 23