காளி மீது நெஞ்சம்
காளி மீது நெஞ்சம் கரைந்து போனதப்பா
வேலி போட்டடைக்க யாரும் இல்லையப்பா
சிவனின் மீது நிற்பாள் சகம் முழுதும் அவளே
பவத்தின் தொல்லை தீர்க்கும் பவதாரிணிப் பெயராள்
ஆட்டை அடித்து கொடுக்கும் பலியையவள் தேடாள்
கூட்டுக்குள்ளே இருக்கும் காமக்ரோதம் அவள் பலியாம்
பாட்டுக்குள்ளே இருக்கும் சுருதியின் இராகம் அவளே
காட்டுக்குள்ளே இருப்பாள் மனித கூட்டினுள்ளும் இருப்பாள்
நாக்கை நீட்டும் குழந்தை யவள் வாக்கையருளும் தேவி
ஏக்கம் தன்னை நீக்கும் ஏற்ற கடவுள் அவளே (மாய)
தூக்கம் நீக்கும் துர்க்கையவள் தாய்மையுளம் படைத்தாள்
சிக்கலான சம்சாரம் அதில் சோர்வை நீக்கும் சாமி
வாளை கையில் கொண்டாளது அசுரர் கொல்லும் கருவி
நாளை வேண்டாம் தாயே இன்றே அருளைப் பொழிவாய்
தாளை பணிந்தால் போதும் தாண்டச்செய்வாள் பிறவி
கோளும் நாளும் சரியாய் ஆக்கும் அவளே இறைவி
கருத்த உருவைக் கொண்டாள் கருத்தை நன்றாய் செய்வாள்
பெருத்த வயிரை கொண்டாள் நம் பாவம்தன்னை தின்பாள்
அருத்தம் மிக உண்டு அவள் அனைவருக்கும் அரசி
துருத்தும் வினை மாய்ப்பாள் அவள் தூய்மை மிகு தாயாம்
குழந்தை மனம் கொண்டோர்க்கவள் அழகினுக்கும் அழகி
பழவினையைக் கொண்டோர்க்கவள் பார்க்கமிக கோரம்
தழதழக்கும் உடையாம் அது இராக்கதரின் தலைகள்
பிழையை போக்கும் குருவாமவள் போதம் நீக்கும் வேதம்
![]()




Users Today : 28
Users Yesterday : 88
Total Users : 58604
Views Today : 266