எண்பதாம் அகவை கவிதை
நமது குருநாதர் அவர்களின் எண்பதாம் அகவை
(28.10.2019)
பிறந்து பிறந்து வாழும் வாழ்வில் ஒருபயனும் இல்லையே
துறந்து விட்டால் போதும் இங்கே தொல்லை இல்லையே
மறந்தும் இங்கே மனது வேண்டாம் மகிழ்ச்சி இல்லையே
சிறந்து நிற்க சேதிசொன்னார் எங்கள் காமேச குருவே
குறளின் பொருளை தெய்வ குரலாய் சொன்ன குறிப்பறிவோமே
அறத்தை எங்கள் அறிவில் வைத்த ஆண்டவன் அவரே
புறத்தில் தள்ளு போகங்களை உயர் யோகம் சொன்னாரே
கறந்த பாலை கரத்தில் தந்தார் காமேச குருவே
அன்பு கொண்டு வாழு என்று அகிலம் உரைத்தாரே
வம்பு செய்யும் மனிதர் அதை கேட்க வேண்டுமே
கரும்பு கையில் கொண்ட காமாக்ஷி தொழுதுமே
அருட்சக்தி என்ற பெயரை கொண்ட காமேச குருவே
அன்னை அவள் பெயரை சொன்னால் ஆசை கொள்வாரே
உன்னை என்னை உலகினிலே உண்மை உணர வைத்தாரே
தன்னை உணர்ந்து கொள்வதுவே தாயின் பூஜை என்றாரே
கன்னல் போன்ற மனம் கொண்ட காமேச குருவே
உண்மை சொன்னால் உள்ளத்தினால் உவகை கொள்வாரே
பொய்மை என்றும் நெஞ்சில் கொள்ளா புது மனத்தாரே
வாய்மை வெல்லும் என்பதற்கு ஒப்புமை இவரே
தூய்மை குணம் கொண்ட எங்கள் காமேச குருவே
எண்பதிலே எடுத்து வைத்தார் காலடி தன்னை
உண்டுறங்கும் வாழ்க்கை என்ற உண்மை உரைத்தாரே
பண்டு வாழ்ந்த முனிவர்களின் பரம்பரையாமே
ஆண்டுபல அவர் வாழ அன்னை தாள் பணிந்தோமே
![]()



Users Today : 9
Users Yesterday : 47
Total Users : 52127
Views Today : 27