உண்மையை உணர்ந்துவிடு !

உண்மையை உணர்ந்துவிடு !
மூத்தோர் சொல் அமுதமென்பார் !
கடைபிடித்தால் கருத்து புரிந்துவிடும் !
கசந்தாலும் கற்கண்டே !
உசத்தியாய் உணர்த்திவிடும் !
அசந்திடாதே எத்தினமும் !
அன்பு செய மறந்திடாதே !
என்பு தோல் இவ்வுடலோ
இறந்தவுடன் மண்ணில்தான் !
அதனால்
அசந்திடாதே எத்தினமும் !
அன்பு செய மறந்திடாதே !
நாளை இருப்போமா என்பதை
நாமறியோம் !
அதனால்
அசந்திடாதே எத்தினமும் !
அன்பு செய மறந்திடாதே !
அன்பு செய்வதுவே
எங்கள் குல வழக்கம் என
திங்களை தினம் தொழுவோம் !
ஸோம ரஸம் எல்லாம்
மனத்தின் உன்மனியாம் !
சடுதியில் இந்த மனம்
சாத்திரம் கேளாது !
விருப்பம் பல கொள்ளும் !
வெந்தனலாய் சினம் கொள்ளும் !
வேந்தனாய் இருந்தாலும்
வேட்கை பல கொள்ளும் !
மனதை நிறுத்திடவே
மந்திரமும் தந்திரமும் !
அலைபாயும் மனதடக்க
அனுதினமும் நம் பூஜை !
ஆவர்த்தி செய்வதெல்லாம்
அதனை அடக்கிடவே !
மந்திரங்கள் உணர்த்துகின்ற
தந்திரங்கள் சில உண்டு !
கணபதி மந்திரமோ
கம்மென்று இருக்க சொல்லும் !
வாலையின் ஆறுமிங்கே
ஆறாதாரக் கொள்கை !
லலிதைக்கு பதினைந்து !
உணர்த்திடும் உனை இங்கு !
யோக பாலையவள்
ஒன்பது சக்கரத்தாள் !
அன்னபூரணியோ
ருசியான தத்துவமாம் !
அருந்தும் உணவெல்லாம்
அவள் சமைத்த அமுதமாகும் !
குதிரை மேலமர்ந்த குமுத வல்லியவள்
அதிவேக நம்மனதிற்கடிவாளம்
போட்டிடுவாள் !
சண்டிகை வந்திடுவாள் ! மன
சண்டித்தனம் நீக்கிடுவாள் !
வனதுர்க்கை மந்திரமோ
மனப்போக்கை மாற்றிவிடும் !
காளிக்கோ ஹூங்காரம் !
அறியாமை பேய் அழிக்கும் !
வெறியாவும் அடக்கிவிடும்
வேதமுதல்வியாம்
காயத்ரி கடவுளினால் !
மனமேதான் சத்துருவாம் !
அங்கிராவும அதைக் கொல்வாள் !
சூடான மனதினையே
குளிராக்கும் சூலினியும் !
உபாதை வந்துவிட்டால்
நாமத்ரயம் இருக்கு !
குருபக்தி சிறந்திடவே
புவனேச்வரி மந்திரமும் !
தினவாழ்க்கை வளம்பெறவே
திதிநித்யா தானிருக்கு !
அவசரம் இல்லாமல்
அனுதினமும் கூறிடவே
தனியான தத்துவமும்
மனதினிலே பிறந்துவிடும் !
மூலமந்திரத்தை
முப்போதும் மறவாதே !
தர்மமும் இதுவேதான் !
உபாஸக தர்மமும் இதுவேதான் !
அஹங்காரம் துளியுமில்லா
அஹங்க்ரக உபாஸனைதான் !
உன்மனதின் உள்ளேதான்
உமையவளும் இருக்கின்றாள் !
நமைகாப்பாள் எத்தினமும் !
சுமை யாவும் இறங்கிவிடும் !
கோபதாபங்கள் சுமைதானே
நம்மனதில் ?
அடுத்த நொடியினிலே
நமன் காத்து நிற்கின்றான் !
தடுத்து நிறுத்திடவே
தாயவளும் இருக்கின்றாள் !
குருவடிவாய்
தடுத்து நிறுத்திடவே
தாயவளும் இருக்கின்றாள் !
அவள் தாளை பணிந்திட்டால்
அந்தகனும் அஞ்சிடுவான் !
சிந்தனையில் எந்நாளும்
சிவசக்தி அமர்த்திவிடு !
உலகமிது சிவசக்தி மயம் !
உணர்த்திவிட்டார் ஸத்குருவும் !
பணக்காசு ப்ரச்சனைகள்
பலவுண்டு பாரிதிலே !
தனைக்காக்க யாருண்டு ?
துதித்திடவே தாளுண்டு !
தூசாக தள்ளிவிடு துயரினையே !
தூயவளின் தத்துவங்கள்
தினம் தினம் மனம் வாங்கி
தூசாக தள்ளிவிடு துயரினையே !
அலைஅலையாய் மோதிவரும்
அகிலத்தில் விஷயங்கள் !
ஆழ்கடலாம் ஆத்மாவில்
அவையெல்லாம் அடங்கிநிற்கும் !
அலையெல்லாம் வெளியில்தான் !
அந்தரத்தில் மிக அமைதி !
அமைதி வேண்டுமென்றால்
ஆழ்மனதை அண்டிவிடு !
அங்கேதான் அருட்குருக்கள்
ஆக்ஷி செய்கின்றார் !
உள்நோக்கிப் பார்த்துவிடு !
உண்மையை உணர்ந்துவிடு !
அன்பாய் இரு ! இது
ஆன்றோர் வாக்கியம் !
பகைவனுக்கும் அருள்வாய் என்று
பாரதியும் பாடிவிட்டான் !
கேட்பதற்கு மிக இனிமை !
கடைபிடிப்பதெளிதாமோ?
அன்னை தந்தை அவர் உறவு
அன்பான தன் மனையாள்
இவரிடம் இயல்பாக
இன்முகத்தை காட்டிடலாம் !
பகைவனுக்கு அருளுவதோ ?
அப்பப்பா மிக கடினம் !
கெடுதல் செய்தாலும்
கருணை காட்டச் சொல்லி
அருளாணை இட்டிட்டார்
அருளாளர் அன்றேதான் !
சிந்தனையில் இக்கருத்தை
சிறிது நான் செய்திட்டேன் !
பகைமை என்னவென்று
பதமாக யோசித்தேன் !
நம்மை குறைசொல்வார் பகையாமோ? அன்றி
நமக்கு சேருவதை தான் பெறுவார் பமைகயாமோ ?
உடலுக்கு ஊறு செய்வார் உதவாத பகையாமோ ?
மனதிற்கு பிடிக்காத மதம் சொல்வார் பமையாமோ ?
தற்பெருமை தான்பேசி தடைதருவார் பகையாமோ ?
நம் சொத்தை தான் பிடுங்கி
நம்பிக்கை கெடுத்திடுவார் அவரும் பகையாமோ ?
மாமியார் பகையாமோ ?
மாற்றுப்பெண் பகையாமோ ?
வேற்று இனத்தவரோ ? மாற்றுக் கருத்தாரோ ?
எவர் நமக்கு பகையாளர் ?
ஆசைப் பட்டதெல்லாம் நமக்கு
அருகிலே வரவேண்டும் ! இல்லையென்றால்
பிறரைக் குறை கூறி பகைமை வளர்த்திடுவோம் !
எனவே
பகை யாரும் இல்லை என்ற
பக்குவத்தை பெறவேண்டும் !
பக்குவத்தைப் பெறுவதற்கே இங்கே
பதமான இல்லறத்தை பாங்காக நடத்திடுவோம் !
தன் மனையாள் ! தன் தங்கை !
தன் தமையன் ! தன் இளவல் !
தன் அன்னை ! தன் தந்தை !
தன் பாட்டன் ! தன் மாமன் !
தவறு செய்தாலும் தன் உறவு என்றேதான்
அவரை மன்னித்து அன்பை தரவேண்டும் !
பிறர் குற்றம் காணுமுன்னே
தன் குற்றம் காணென்றார்
குறள் தந்த கொற்றவனார் !
இன்று உலகமிங்கே சிறிதாச்சு !
இல்லத்தில் இருந்தபடி
இங்கிலாந்து சென்றிடலாம் !
அமெரிக்க அதிபர் பேச்சை
அருகிலே கேட்டிடலாம் !
சீனாவின் செய்பொருளை
சாட் செய்து வாங்கிடலாம் !
வாட்(டையும்)டும் வரிகளையும்
வீட்டிலே இருந்தபடி
நெட்டிலே கட்;டிடலாம் !
நாட்டின் நிலைமைகளை
கூட்டத்தில் இடிபடாமல்
கூகுளிலே அறிந்திடலாம் !
தவறுகள் நடக்கிறது !
தத்துவங்கள் பிறழ்கிறது !
இத்தனையும் இடித்துரைக்கும்
இல்லத்தின் தொலைக்காஷp !
கொலை காட்டும் ! சிலை காட்டும் !
வலையினிலே சிக்குகின்ற நிலைகாட்டும் !
தலை காக்கும் பொருள் காட்டும் !
அலைகின்ற கடல் பொங்கும்
கொலைகார சுனாமி காட்டும் !
மலை காட்டும் ! மதம் காட்டும் !
விலைபோகும் விதம் காட்டும் !
இலைபோட்டு உண்கையிலே
இத்தனையும் பார்த்துவிட்டு
இந்த உலகம் இப்படியா என
சிந்தை மிக கலங்கி
அந்தி சாயும் நேரத்தில்
ஆண்டவனை மறந்துவிட்டு (கிரிக்கெட்)
ஆட்டத்தை கண்டிடுவோம் !
இந்நிலைமை இங்கு மாறும்
பொன்நாள் வரவேண்டும் !
தான் யார் ? தன் குணமென்ன ?
வாழ்நாளில் நாம் ஆற்ற
வேண்டிய செயல் என்ன ?
ஆண்டவன் என்பது யார் !
அவருடைய அருள் என்று ?
சிவன் என்றால் அன்பாமோ ?
தவம் செய்யும் காமாஷp
தாய் அவளின் தத்துவம் எது?
இவை யாவும் சிந்தித்து
இன்முகத்தோடு வாழ வேண்டும் !
கலி தோஷம் போவதற்கு
கடவுளின் பேர் இருக்கு !
ஆயிரக்கணக்காக
அவன் பெயர் எதற்காக ?
ஏதேனும் ஒரு பெயரை
நாவாலே நவின்றிடவே !
கையிரண்டு ! காலிரண்டு !
கண்ணுண்டு காண்பதற்கு !
மண்ணுண்டு வாழ்வதற்கு !
இத்தனையும் நமக்குண்டு !
சித்தமது சிதறிடாமல்
சீராக வாழ்வதுவே
சிறப்பான பகுத்தறிவு !
வம்பு பேச வையகத்தில்
வகைவகையாய் விஷயமுண்டு !
நேரத்தை விரயமாக்கி
புறம் பேச போகவேண்டாம் !
அறமென்றால் அன்புணர்வு !
அன்பேதான் (என்றும்) நம் நினைவு !
அன்பென்பது சிவமாகும் !
அதன்மீது அமர்ந்துள்ளாள்
அழகான காளியவள் !
பிறர் விஷயம் பேசுகின்ற
பண்டன் என்ற அசுரனையும்
பராசக்தி வதம் செய்வாள் !
பாருங்கள் அவள் அருள்வாள் !
வம்பு பேச்சு சும்ப நிசும்பர்கள் !
அன்பென்ற அம்பெய்து
அவரையே அழித்திடுவாள் !
அதனால்தான்
சண்டியின் மந்திரமே
சகத்தினிலே கலி அகற்றும் !
(அறியாமை) மண்டிக்கிடக்கின்ற
மனத்தாலே அவளைப்பார் !
சினமகலும் ! சிந்தை சீராகும் !
நல்குணம் பெருகும் !
தொல்லை தரும் தொலைக்காஷp
இல்லத்தின் இனிமை காட்டும்
காக்ஷியது கடுகி வரும் !
ஐயம் அகன்று விடும் !
அதுவேதான் அந்த பீஜம் !
முதலான பீஜமது
நாலான வேதமாகும் !
இரண்டான பீஜமது
(ஹ்)ரீங்காரத்தால் அருள் செய்யும் !
கலித்தொல்லை தீர்ந்திடவே
க்லீம் என்ற பீஜமப்பா !
சாமுண்டி அவள் வருவாள் !
சாத்திரத்தை புரிய வைப்பாள் !
விச்சே என்ற ஒரு
வீரமான ஸம்போதம்
வீரத்தைத் தந்துவிடும் !
வீண்பேச்சு விட்டகலும் !
வேதத்தின் பொருள் புரிய
வேதாந்த வாழ்வு பெற
வீரத்தாய் சாமுண்டி
வரம் அருள்வாள் வேண்டியதை !
இச்சகத்தில் பொருள் வேண்டும் !
இனிமையான இல்லம் வேண்டும் !
இல்லாளின் இதம் வேண்டும் !
பொல்லாப்பு பேச்சகன்று
வல்லமையாம் வரம் வேண்டும் !
இத்தனையம் அவள் அருள்வாள் !
அத்தன் அவள் மனையாள் !
சிவதூதி என்றவொரு
சக்தி இருக்கின்றாள் !
நித்யையுடன் கூடி அவள்
யுத்தத்திலே செல்கின்றாள் !
சிவம் என்றால் அன்பறிவோம் !
நம் பேச்சு அன்புடனே
நல்லதாக நவின்றிட்டால்
கொல்லவரும் மாந்தரிடம்
நல்தூது அவள் செல்வாள் !
லலிதையென்றால் நற்புலன்கள் !
லலிதையின் படையினிலே
நல்வாக்கு சிவதூதி !
அன்பென்ற சிவதூதி !
அவள் பெயரை நாம்கூற
அகன்றுவிடும் பவபீதி !
காளியின் கையினிலே
கூறான வாள் எதற்கு ?
வேறான சிந்தனையை
வெட்டிடுவாள் வேறெதற்கு ?
மாதாவின் கழுத்தினிலே
மாலை மாலையாக
மனிதரின் கழுத்தெதற்கு ?
அன்பென்ற சிவத்தின் மேலேறி
வம்பு செய்யும் அந்த
ஐம்புலனை அடக்காதார்
அசுரரின் தலையன்றோ ?
புலன் ஐந்தும் போகத்திலே
போனபின்பு தலைஎதற்கு ?
தலையும் நரையாகி
தன்பற்கள் வீழ்ந்துவிட
உடலில் சுருக்கங்கள்
இடம்மாறி போகிவிட
இத்தனை வயதாகி
போனபின்பு என்ன செய்ய ?
அன்னையவள் பெயரை சொல்லி
அழைப்பதுவே அறிவாகும் !
அவள் கையில் சங்கு கொண்டாள் !
பெயர் கூறி பொழுது போக்கி
அயராமல் அண்டிவிடு !
தண்டனை தாராமல்
தாயவள் தரிசனத்தை
சேய் நமக்கு தந்திடுவாள் !
உள்ளே இருக்கின்றாள் !
ஓங்காரி என்பார்கள் !
வெளியாவும் அவள் வடிவே !
களிப்பெய்தும் காளியவள் !
துளி நினைத்தால் போதுமப்பா !
துள்ளி வந்தடுவாள் தூதியாக !
அள்ளி அருள் செய்வாள்
அருட்சக்தி குருவாக !
சிறிய விஷயம்தான் !
சிந்தைதனில் ஏற்றிவிடு !
சின்னதிரை போட்டு
சின்னதிரை மூடிவிடு !
சொன்னபடியெல்லாம்
சீர்மனத்தை மாற்றிவிடு !
ஆவல் கொண்டிடுவாய் !
கோவில் கொண்டிடுவாள் !
ஐம்புலனை உள்நோக்கி
அழகாக திருப்பிவிட்டால்
பழுத்த ஞானத்தை
பராசக்தி தந்திடுவாள் !
தேரிலே வந்திடுவாள் !
தேரென்பது தன் மனமே !
ஸ்ரீசக்ர தேர் என்பது
சிந்தை செய்யும் நம் மனமே !
சிந்தையிலே சொந்தமாக
சிவைதன்னை கொண்டுவிடு !
பவம்தன்னை கொன்றிடுவாள்
அவம் யாவும் அழித்திடுவாள் !
கவலையெலாம் துறந்துவிட்டு
கடவுளிடம் அமர்ந்து விடு !
காக்ஷியினைக் கண்டுவிடு !
கவியிதனைப் புரிந்துவிடு !
புவியினிலே புகழ்பெறுவாய் !

Loading

admin

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments