நான்காம் கண்
ஆண்டுபல ஆயிற்று அண்டத்திலே அசைவில்லை
ஈன்றவளுக் கென் செய்வேன் – தூண்டிவிட
சான்றோர்கள் செப்பிடுவார் சொன்னசொல்காக்க
நான்காம் கண் தா
கணிணிகள் வந்தபின் கால்அசைக்க வேண்டம்
துணிவுபெற்ற பெண்களுண்டு – தணிகைநாதன்
தான்பெற்ற முக் கண்ணன்சிவனுக்கின்று
வேண்டுமோ நான்காம் கண்
நெற்றிக்கண் திறந்தாலும் திறந்திடுவாய் சிவனே
பற்றி எரிந்தாலும் பார்போற்றும் – உற்றவினை
சுற்றி வரும்போது சுகமருள்வாய் சுந்தரா
பற்றிடுவேன் நான்காம் கண்
சுற்றுச் சூழல் போச்சு சுற்றமிதில்
விற்பனையால் நீரும் குறையாச்சு
நெற்றிக்கண் போதாது நீலகண்டா
ஏற்றிவிடு நான்காம் கண்
வெப்பத்தால் பூமியது வேகுதப்பா வேந்தா
தப்பாய் நடந்தாலும் தாங்குதப்பா சட்டம்
ஒப்புக்கு உள்ளதோ உந்தன் கண்?
இப்புவிக்கு ஏற்றது நான்காம்கண்
முறிக்கின்றார் அன்பினை முக்கண்ணா
வெறித்தனமாய் வாகனத்தை ஓட்டுகிறார்
பறித்திடுமே பல்லுயிரை முக்கண் போதாது
அறிவென்னும் கண்திறப்பாய் அவனி
![]()




Users Today : 33
Users Yesterday : 31
Total Users : 52244
Views Today : 50