அல்லவை போக அறுசுவை கூட
பலவிதமாய் வைப்போம் கொலு (1)
கணபதியும் கந்தனும் கொற்றவை கண்ணன்
துணைவர வைப்போம் கொலு (2)
செட்டியார் பொம்மையுடன் சீரான சொக்கநாதர்
செட்டாக வைப்போம் கொலு (3)
திருமணத் தம்பதியர் தாத்தா பெயரன்
வரிசையாய் வைப்போம் கொலு (4)
அன்போ டழைத்து இசையுடன் பண்பாடி
பண்புடன் வைப்போம் கொலு (5)
![]()





Users Today : 42
Users Yesterday : 95
Total Users : 59934
Views Today : 130