இன்றெனக்கு பல வேலை
இன்னொரு நாள் வருவாய்
பெற்றெடுத்த அன்னைக்கு
சற்று நேரம் ஒதுக்கவேண்டும்
இன்றெனக்கு பல வேலை
இன்னொரு நாள் வருவாய்
அவையத்து முந்தி செய்த
தந்தை சொல் கேட்க வேண்டும்
இன்றெனக்கு பல வேலை
இன்னொரு நாள் வருவாய்
அன்புடைய மனைவியிடம்
அருகிலே அமர வேண்டும்
இன்றெனக்கு பல வேலை
இன்னொரு நாள் வருவாய்
பெற்ற பிள்ளை தனையணைத்து
உச்சியிலே முகர வேண்டும்
இன்றெனக்கு பல வேலை
இன்னொரு நாள் வருவாய்
வேண்டும் என்று வருவோர்க்கு
வேண்டியதை தர வேண்டும்
இன்றெனக்கு பல வேலை
இன்னொரு நாள் வருவாய்
பாதியிலே விட்ட கவியின்
மீதியினைத் தொடர வேண்டும்
இன்றெனக்கு பல வேலை
இன்னொரு நாள் வருவாய்
உற்றார் வருகையிலே
உணவளித்து மகிழ வேண்டும்
இன்றெனக்கு பல வேலை
இன்னொரு நாள் வருவாய்
வேள்வி பல செய்து
வேதியரைப் போற்ற வேண்டும்
இன்றெனக்கு பல வேலை
இன்னொரு நாள் வருவாய்
தமிழினிலே பாக்கள் செய்து
தரணியோர்க்கு தர வேண்டும்
இன்றெனக்கு பல வேலை
இன்னொரு நாள் வருவாய்
நாட்டுக்கு உழைத்து என்றும்
நல்ல செயல் செய்ய வேண்டும்
கொடுங் கூற்றே அந்தகனே உன்னைத்தான் சொல்கின்றேன்
இன்றெனக்கு பல வேலை
இன்னொரு நாள் வருவாய்
![]()




Users Today : 130
Users Yesterday : 188
Total Users : 46357
Views Today : 466