அஜபா நடனம் அழகிய கவிதையில்
நடனமாடுறார் நடராஜர் நடனமாடுறார்
உடலுக்குள்ளே ஓடும் அ சபையில் அவர்
(ந)
சுவாசக் காற்றின் மூலமாக ஊஞ்சலாடுறார்
தேவேசன் என்ற குருவாய் ஊஞ்சலாடுறார்
ஹம்ஸ நம என்று சொன்னால் மேலே ஏறுறார்
அம்பிகையும் அதனை கண்டு ஆனந்த மாகிறாள்
பேச்சு மூச்சு எல்லாம் போனால் பெயரும் ஏதடா
மூச்சுக்குள்ளே மூவுலகும் மூழ்கி இருக்குடா
ஆகாயம்தானே எங்கும் விரவியிருக்குது
ஆகாயத் தத்துவந்தான் சிவனாய் ஆனது
சிதம்பரத்தில் ரகசியமாய் சித்தே உள்ளது
மிதமிஞ்சி இருந்திடுமோ பூரணம் என்பது
வேதமுபனிஷத்து எல்லாம் இதையே கூறுது
நாதம் எழுப்பும் வித்தையதே நடராஜர் என்பது
கவிதையிலே கூறிவிட்டேன் கருத்துமுள்ளது
அவித்தையிலே அமுங்கிடாமல் அருளை பெற்றிடு
(வேதாந்தக் கவியோகி நாகசுந்தரம்)
20-09-2020
![]()





Users Today : 42
Users Yesterday : 95
Total Users : 59934
Views Today : 202
கருத்தான கவிதை இது. வாழ்த்துகள்