குரல் : ஸ்ரீமதி அபர்ணா க்ருஷ்ணன், மும்பை
எழுந் தோடி போடி மாயை
உன் வாலை சுருட்டி கொண்டு
(எ)
குருநாதன் உபதேசம் கர்ணரஞ்சனமா யிருக்க
உனக்கேன் கதனகுதூகலம்
(எ)
சங்கராபரணன் பஞ்சாக்ஷர மந்திரம்
சொந்தமாய் வந்து சொரூபம் அறிய
சரஸ்வதி கடாக்ஷம் சாத்திரம் புரிய
ஜகன்மோகினி உன் சாகசம் ஏனோ (எ)
ஆனந்த பைரவி யாய் ஆத்ம போதம்
தேனென பாயும் துரீய மோஹணம்
வானென விரியும் வேதாந்த லலிதா
ஊண் உறக்கம் இன்றி நீலாம்பரி நீ (எ)
பதினோரு ராகமாலிகை
![]()





Users Today : 19
Users Yesterday : 88
Total Users : 58595
Views Today : 171