வாழவேண்டும் மனிதா
உலகில் வரும் துன்பம் உனதா
வானமுன் எல்லை
உனக்கேன் வீண்கவலை (வா)
(வேறு)
நல்லதுக்கெல்லாம் ஆசைப் படு
அல்லவையெல்லாம் அகற்றி விடு
இல்லாதோர்க்கு இல்லம் கொடு
கல்லாதோர்க்கு கல்வி கொடு (வா)
(வேறு)
கங்கை வந்தது பெரு முயற்சியாலே
பொங்கும் காவிரி ஒரு பாத்திரத்தாலே
சங்கம் வளர்ந்தது ஏழை பாட்டியாலே
சங்கை வேண்டாம் சிலிர்த்தெழுவாயே (வா)
(வேறு)
சாப்பிடும் முன்னே உழவனுக்கு நன்றி சொல்லு
கூப்பிடும் நாக்கே இறைவன் தந்த பரிசு
வேப்பமரமும் ஆலும் அரசமும் நிற்கும் உயர்ந்து
ஊக்கமும் உயர்வும் என்றும் உனக்குண்டு (வா)
![]()





Users Today : 19
Users Yesterday : 88
Total Users : 58595
Views Today : 177