பெண்ணே எழு நீ இடியாக !
(பெண்ணியம்)
கோதை பெண்ணிருந்தாள் காலையிலே எழுப்பிவிட்டாள்
பாதை காட்டிவிட்டாள் பெண்ணே எழுந்துவிடு இடியாக !
வாதை அகன்றுவிடும் வாழ்க்கை சிறந்துவிடும்
போதை கணவருக்கு புத்தியும் வந்துவிடும் !
சண்டைபோட்டதெல்லாம் சரித்திரமாய் போகட்டும் !
மாமியாரும் மருமகளும் மங்களமாய் வாழட்டும் !
பெண்ணே பெண்ணடிமை பேய்த்தனங்கள் ஓயட்டும் !
பெண்ணே எழுந்துவிடு இடியாக இனியேனும் !
தாய்குலம் நீ என்பார் பொறுமையின் சிகரம் என்பார்
பேயும் இரங்கும் என்பார் பின்னரோ அடிமை செய்வார்
உண்மை உணர்ந்து விடு உன்னை உணர்ந்து விடு
பெண்ணே எழுந்துவிடு இடியாக இனியேனும் !
ஏட்டில் உயர்த்திவிட்டு இல்லத்தில் அடிமை செய்வார் !
விட்டில் பூச்சியாக விழுந்திடாதே அடிமையாக !
தட்டில் சோறு விழ தாய் உந்தன் தயவு வேண்டும் !
அட்டிகை மனம் வெறுத்து அடிமைதனம் விலக்கு !
காதல் இன்றேல் சாதல் என்று பாரதியை துணைக்கழைப்பார்
மோதலிலே போய்முடிய பாதியிலே விலகிடுவார்
பார்த்து பழகு நீயும் பயந்தன்னை போக்கிவிடு !
சார்ந்து வாழாதே சொந்தமாக சுமந்துவிடு !
வார்த்த சிலை என்பார் வார்த்தையில் மயங்காதே
வேர்த்து விருவிருக்க உழைப்பென்னவோ உன்னதுதான் !
நாரின்றி மலரினை நாம் கோற்பதெவ்வாறு ?
நாரி உன் பெயர்தான் நலம் உன்னால் விளைவதுதான் !
தமிழ்கவிஞன் நான் என்று தலைநிமிர்த்தும் தரணியோரே
தமிழ் அமுது உண்ணவைத்த தாய் அமுதை மறக்காதீர்
தாரமதை தாயாக மதித்து வாழ்ந்திடுவீர் இல்லையென்றால்
பெண்ணே எழுந்துவிடு இடியாக (என) எழுதப் பணித்துவிடு !
விண்ணில் செல்வதற்கு வீரம் உனக்குண்டு !
பண்ணில் பாடுதற்கு பக்குவம் உனக்குண்டு !
கண்ணீர் சுமப்பதற்கு இனியும் விடமாட்டோம் !
விண்ணில் இடிபோல அதிர்வை கொடுத்துவிடு !
உந்தன் வீரத்தால் பெண்ணடிமை அழியட்டும் !
சிந்தனை உயர்த்தி நீயும் சீக்கிரம் எழுந்துவிடு !
சந்தத்தில் பாடிவிட்டோம் சாத்திரமாகி விடு !
விந்தைதான் இன்னும் நீ எழுவதற்கு எழுதுவது !
![]()




Users Today : 118
Users Yesterday : 188
Total Users : 46345
Views Today : 297